ஸ்ரீராம் – ராமஜோசியம் ராமஜோசியம் டிகி டிகி டிகி

ஹாலில் மாட்டியிருந்த நாம சங்கீதப் படத்தைப் பார்த்தபடி அப்பாவின் நினைவுகளில் ஆழ்ந்திருந்தான் விஸ்வம்.
“இந்தப் படம் எப்படி உங்கள் அப்பா நினைவைத் தருகிறது? உங்க அப்பா குக்.. ஸாரி, செஃப்தானே?
லலிதா முன்னர் கேட்ட கேள்வி நினைவில் ஆடியது.
“பரவாயில்லை.. ‘குக்’ன்னே சொல்லலாம். அப்பா தன்னோட அப்பா மேல ரொம்ப மரியாதை வச்சிருந்தார். அவரோட அம்மா எர்லியாகவே காலமான நிலைல அவரோட அப்பா அந்தக் காலத்துல உடம்பு முழுக்க காவித்துணி மாதிரி ஒரு ட்ரெஸ்… அதைப்போட்டுக்கிட்டு காதுகளை மறைத்தபடி தலைல காவித்தொப்பி , நெத்தியில நாமம்னு தெருத்தெருவா தம்புராவோட ராமஜோசியம் ராமஜோசியம்னு சின்னக் குரல்ல மந்திர உச்சாடனம் மாதிரி சொல்லிண்டே போவாராம். . அப்பாவும் சில சமயம் சின்ன வயசுல அவர் கூட ஒரு சப்லாகட்டையோட போயிருக்காராம்.சிலர் கூப்பிட்டு ஜோசியமோ, நல்வார்த்தையோ நாம சங்கீர்த்தமோ அவர்ட்ட கேட்டு அரிசி, பருப்பு பணம்னு கொடுத்தனுப்புவாங்களாம். பொண்ணை அதாவது என் அத்தையை சுமாரான இடத்துல கட்டிக் கொடுத்து இவரையும் படிக்க வச்சிருக்கார். அப்பாவுக்கு படிப்பு சரியா வராம சமையல் வேலைக்குப் போய் அப்பாவை ஓய்வெடுக்கச் சொன்னால் அவர் சம்மதிக்காம கடைசிவரை இதிலேயே இருந்தாராம். தாத்தாவுக்கு ஃபோட்டோன்னு எதுவும் கிடையாதுன்னு அப்பா இதை மாட்டி வச்சு தாத்தாவை நினைச்சு தினமும் பூ வைப்பார். தான்தான் சரியா படிக்கலைன்னு என்னை நல்லா படிக்க வச்சார். ‘நீ தாத்தாவுக்கு செய்யற மரியாதை அது’ம்பார். அப்பாவும் போனப்புறம் எனக்கு அப்பா ஞாபகத்தையும், தாத்தா ஞாபகத்தையும் இந்த படம்தான் கொடுக்குது..”
லலிதாவுக்கு தான் கொடுத்த பதில் மனதில் ஓட, கண்கள் கசிய நின்று கைகுவித்து மனதில் அவர்களை நினைத்து விட்டு அலுவலகம் கிளம்பினான் விஸ்வம்.

8 Comments on “ஸ்ரீராம் – ராமஜோசியம் ராமஜோசியம் டிகி டிகி டிகி”

  1. அருமையா எழுதியிருக்கீங்க, ஸ்ரீராம். இத்தனை வரிகளுக்குள், கதையின் சுருக்கம் போன்று ஒரு முழுக்கதையோட அம்சம் முழுவதையும் அழகாக அடக்கி விட்டீர்கள்.

    கீதா

  2. ஒரு தலைமுறையின்.பெருமையையும் அருமையையும் அழகாக காட்டி விட்டீர்கள். வாழ்த்துகள்

  3. நல்ல கதை. இரசித்தேன். அந்தக் காலத்தில் நாகையில் ராமஜோசியம்.. சந்திர சாஸ்திரம் என்று ஒரு தம்பூரா போன்ற கருவியை மீட்டியபடி ஜோசியர்கள் வருவார்கள்.

  4. உங்கள் கருத்து மதிப்பாய்வர்க்காக காத்திருக்கிறது.
    நல்ல கதை. இரசித்தேன். அந்தக் காலத்தில் நாகையில் ராமஜோசியம்.. சந்திர சாஸ்திரம் என்று ஒரு தம்பூரா போன்ற கருவியை மீட்டியபடி ஜோசியர்கள் வருவார்கள்.

Comments are closed.