14.11.25 கவியரங்கத்தில் வாசித்த புஷ்பா விசுவநாதன் கவிதைகள்

        3.   தன்னம்பிக்கை 

“உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே”
தன்னம்பிக்கையின் இலக்கணம் இதுவோ?
செந்தமிழ்க்கவிஞன் காட்டிய வழியோ?

தன்னை நேசித்தால் தன்னை மதித்தால்
தன்னம்பிக்கை தானே வளருமோ?
தன் பலமறிந்து முயன்று பார்த்தால்
தன்னால் இயலாத செயலும் உண்டோ?

தன்னம்பிக்கை இருந்தால் போதும்
உடல் ஊனங்கள் மறைந்தே போகும்
தன்னம்பிக்கை இல்லாது போனால்
மனமே ஊனமாய் ஆகி விடுமே!

என்னால் முடியும் என்பது தன்னம்பிக்கை
என்னால் மட்டுமே முடியும் என்பது தலைக்கனம்
தன்னம்பிக்கை திறமையை வளர்க்கும்
தலைக்கனம் தாழ்வை அளிக்கும்

இன்னும சொல்லவா?
தன்னம்பிக்கை…………………
சோர்ந்து போனால் தட்டி எழுப்பும்
தடுக்கி விழுந்தால் தூக்கி எழுப்பும்
முள்ளை மறந்து ரோஜாவைப் பார்க்கும்
முயன்று முயன்று இறுதியில் ஜெயிக்கும்

       4.   பத்தும், இருபதும்

குஜராத்தில் வெள்ளம்
டிவியில் காட்சிகள்
பெருக்கெடுத்தோடும்
ஆற்றுச்சுழலில்
சிக்கித் தவிக்கும்
ஊர் மக்களை
மீட்டெடுக்க
மீட்புப் பணியினர்
பத்து பேர்
வேடிக்கை பார்த்து
வீடியோ எடுக்க
வெற்று மக்கள்
இருபது பேர்

             5.    பறந்து போ

பச்சைப் புல் மேலே
ஒரு‌ நீலப் பறவை
அமெரிக்கன் புளூ பேர்ட்.
பாதி வெள்ளை பாதி நீலமாய்
உருண்டைக்கண்களை உருட்டி உருட்டி
குட்டி அலகைச்சற்றே பிளந்து
எட்டிப் பார்க்குதோ துணையின் வரவை?

சிறகுகள் விரித்துப்‌பறந்து சென்றிடு
சிறிது நேரம் நீ இப்படி இருந்தால்
அமர்ந்திருக்கும் உன்னைப்பிடித்து
அடைத்து விடுவார் கூண்டுக்குள்ளே.

One Comment on “14.11.25 கவியரங்கத்தில் வாசித்த புஷ்பா விசுவநாதன் கவிதைகள்”

Comments are closed.