நாகேந்திர பாரதி கவிதைகள்

14.11.25 கவியரங்கத்தில் வாசித்த கவிதைகள்

  1. ஆறாம் அறிவு

பிறப்பு என்பது
சக்தியில் கலப்பது

இறப்பு என்பது
சிவத்தில் கலப்பது

பிறப்பும் இறப்பும்
சக்தியும் சிவமும்

இதற்கு இடையில்
எத்தனை பிறவி

பிறவியை அறுப்பதே
ஆறாம் அறிவு

4 கவிதை இதழ்கள்

காதல் தடவிய
கவிதை கேட்டாள்

இதழைத் தடவி
இதுதான் என்றான்

பொய்க் கோபத்தில்
உதட்டைச் சுழித்தாள்

புதிய கவிதையைப்
பூத்துச் சிரித்தாள்

உதட்டுக்குள் கவிதையை
ஒளித்து வைத்திருப்பவள்

  1. இது போதும் இப்போது

பார்த்ததும் சிரித்தும்
பழகியதும் அப்போது
நினைப்பதும் மகிழ்வதும்
நெகிழ்வதும் இப்போது
இது போதும் இப்போது

தொட்டதும் தொடர்ந்ததும்
துடித்ததும் அப்போது
விட்டதும் விலகுவதும்
விரும்புவதும் இப்போது

இது போதும் இப்போது