சுஜாதா கிருஷ்ணமூர்த்தி/கணவன் மனைவி

என்ன கிளம்பிச்சா
,ஹெல்ப் பண்ணினா சீக்கிரம் கிளம்பலாம், பசங்க இப்போ தானே போனாங்க, இன்னும்
10 நிமிஷம் ஆகும்.
என்ன 10 நிமிஷமா போச்சுடா இன்னிக்கி லேட் தான்.ரெஜிஸ்டர் ஆபீஸ் கும்பலாகிடும்
தெரியுமில்ல, அப்ப காலைல ஹெல்ப் செஞ்சி இருக்கணும்.
என்ன நான் ஹெல்ப் செய்யணுமா!!
பின்ன செஞ்சா என்ன!!குறைஞ்சு போயிடுவீங்களா, செல்ல பார்த்திட்டே இருந்தா
இப்படித்தான்!!!
போதும் ரொம்ப பேசாதே
இப்ப கிளம்பு.
அப்பாடி !! வந்து ரெஜிஸ்டர் ஆபீஸ் வந்து சேர்ந்துட்டோம்.
சார் நீங்க ரெண்டுபேரும் ஹஸ்பண்ட் வைப் தானே
ஆமாங்க
இங்க டாக்குமெண்ட் ப்ரூப் வேணும் கொடுங்க
அந்த கல்யாண செர்டிபிகேட்ட எடு
அச்சச்சோ, நான் எடுத்து வைக்கலயே உங்கள தானே எடுத்து வைக்க சொன்னேன்
என்னயா!!! நானா!! என்கிட்டே எங்க சொன்ன!! நீதானே எடுத்து வைக்கணும்
என்னது!!எனக்கு மட்டும் தான் பொறுப்பா!!
ஓவரா இங்க வந்து பேசாதே!!!
சார் மேடம் நிறுத்துங்க, எனக்கு புரிஞ்சு போச்சு நீங்க ஒரிஜினல் கணவன் மனைவின்னு.
அதுக்கு இந்த சண்டைய விட மேலா ஒரு ப்ரூப் வேணுமா!! ஹாஹா.!!
இன்னும் நேரம் இருக்கு வீட்டுக்கு போய் கல்யாண பேப்பர சண்டை இல்லாம
எடுத்திட்டு வாங்க.

2 Comments on “சுஜாதா கிருஷ்ணமூர்த்தி/கணவன் மனைவி”

Comments are closed.