எம். ஷங்கர்/க்ராஸ் கனெக்‌ஷன்

புது அப்பார்ட்மென்ட்டுக்குள் குடிபுகுந்தவுடனே ஆணிஅடிப்பதிலும் எலக்ட்ரிக்கனெக்‌ஷனலிலும் பிஸியாக இருந்தவன், மணியடிப்பதை கேட்டு கதைவை திறந்தான்.
“ஹலோ நான் கமலா, பக்கத்து ஃபிளாட் , உங்களை எங்க வீட்டுக்கு காஃபி சாப்பிட கூப்பிட வந்தேன்”
என்றவளிடம்
“ நீங்க உஷாவை கூட்டிட்டு போங்க, நான் இந்த கனெக்‌ஷனை முடித்துவிட்டு வரேன்” என்றான்.
உஷாவை வீட்டுக்கு கூட்டி வந்த கமலா
“உங்க ஹஸ்பெண்ட் எல்லாவேலையும் செய்யறாரே எங்க வீட்டுல இவருக்கு பல்பை மாட்றதுக்குகூட எலக்ட்ரீஷியனத்தான் கூப்பிடுவார்”
பேச்சு சப்தம் கேட்டு வெளிவந்த கணவரை காட்டி
“இதோ வராரு பாருங்க , நாள்முழுக்க கம்ப்யூட்டர்லேயே ஒக்காந்து ஏதோ எழுதிட்டு.. இவங்க புதுசா வந்திருக்காங்க..இவங்க ஹஸ்பண்ட்உங்கள மாதிரி வெட்டியா கம்ப்யூட்டர்ல ஒக்காரல..வீடுமுழுக்க எலக்ட்ரிக்கனெக்‌ஷனும், ஆணியும் அடிச்சுக்கிட்டு பிஸியா இருக்கார்”
அவரை பார்த்ததுமே உஷா
“நீங்க ….தானே? பிரமாதமா எழுதுவீங்களே? “என்றதும் அவர் அமைதியாக ஆமோதித்தார்.
“ஏங்க இவரைப்போய் வெட்டியா இருக்கார்னு சொல்லீட்டீங்களே. இவர் பெரிய எழுத்தாளர் இவருக்கு எக்கசக்க ரசிகர்கள் இருக்காங்க. ஆணி அடிக்கறது என்னங்க பெரிய விஷயம் நூறுரூபாய் கொடுத்தால் பண்ண ஆளிருக்காங்க. ஆனா இவரப்போல எழுத முடியுமா? இதுக்கெல்லாம் பெரிய திறமை வேணும்..”
இன்னும் மேல மேல அடுக்கிக்கொண்டுபோன உஷாவின் குரல் பக்கத்து ஃபிளாட்டிலிருந்து எழுந்த
’ இக்கரைக்கு அக்கரை பச்சை’ என்ற பாட்டின் சத்தத்தில் அமிழ்ந்தது

One Comment on “எம். ஷங்கர்/க்ராஸ் கனெக்‌ஷன்”

Comments are closed.