பேயவள் காண்/கோவை எழிலன்

இலக்கிய இன்பம் 13

பொதுவாக தாய் என்பவள் கருணையே உருவானவளாக இருப்பவள். ஒருவரை உயர்த்துவதற்கு தாய் என்ற சொல்லையும் ஏசுவதற்குப் பேய் என்ற சொல்லையும் பயன் படுத்துவது வழக்கம்.

நாடு அடிமை கொண்டிருந்த போது கருணை அன்பு போன்றவற்றை விட்டு விட்டு ரௌத்திரம் பழக அழைப்பு விடுத்த பாரதி தன் பாரதத் தாயை பேய் என்கிறான். இந்து மதத்தின் உக்கிர பெண் வடிவமான காளியன்னை பாரதியின் இவ்வருணனைக்கு வசதியாக அமைந்து விட்டது.

வெறிகொண்ட தாய் என்ற அந்தப் பாடலின் துவக்கம் இங்கே

“பேயவள் காண் எங்கள் அன்னை –
பெரும் பித்துடையாள் எங்கள் அன்னை
காய்தழல் ஏந்திய பித்தன் – தனைக்
காதலிப்பாள் எங்கள் அன்னை”