
என்றோ பிறந்த என்னை இன்றளவும்
நினைவில் கொண்ட என் அன்பர்களே!
மகிழ்ச்சி! மகிழ்ச்சி!!
என் கனவுகளையும் நனவாக்கிடில்
மகிழ்ச்சி கைக் கொட்டி கூத்தாடிடுமே!
ஜாதிகள் ஒழியவில்லை
பல பேதங்கள் ஓயவில்லை
அச்சமின்றி மாதர் தம்
வழி நடக்கவும் முடியவில்லை.
நாம் ஊருக்கும் பேருக்கும் இன்றும் அடிமை.
என்று மடியும் இந்த சுதந்திர தாகம்?
என்று மடியும் இந்த அடிமை மோகம்?
வருவேன் அன்று உங்கள்
பாரதி மீண்டும் உயிர்த்து
கும்மியடித்து கொண்டாடிட!
11 .12.2025
பாரதியார் பிறந்தநாள் நினைவில்
