
ஆதரிப்பார் ஆருமின்றி ஊரெல்லாம் ஓடியொளிந்தேன்;
கையில் காசின்றி பசியில் துடித்திருந்தேன்;
பாட்டெழுதி படும் பாட்டை புறந்தள்ளினேன்;
பிறந்தநாளென்று அவள் சொல்லியே அறிந்திருந்தேன்;
இன்று
பாரதம் முழுவதும் என் பேச்சு;
பட்டி தொட்டியெங்கும் முழங்குதென் பாட்டு
என்னை விற்க இயலுமா?
என் தமிழை விற்க இயலுமா?
எதை விற்று எதை வாங்க இயலும்?
இன்று என் விடை தெரியா வினா இதுவே!
