
திடீரென விழித்தாள் பவித்ரா.
என்ன கனவு இது! இந்தக் கனவு இப்போதெல்லாம் அடிக்கடி வருகிறது.
ஒரு பெண்… பச்சை வண்ணத்தில் நைட்டி போல் உடையணிந்து ,கைகள் தெளிவாக இல்லாமல், அதிக முடியுடன், கருப்புக் கயிறுகளால் கட்டப் பட்டவளாகத் தென்படுகிறாள்.
பார்க்கக் கொஞ்சம் பயமாகவும், ஆனால் பாவமாகவும் இருந்தத
அவளும்,கணவன் அரவிந்த்தும் மகப்பேறு மருத்துவரிடம், கல்யாணம் ஆகி ஆறு வருடங்களாகியும் , குழந்தை இல்லாததால் சிகிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
அன்று வழக்கம் போல டாக்டரிடம் சென்று விட்டு, வரும் வழியில் சாலையோரம் அதிகக் கூட்டம் !
என்னவென்று பார்த்தால், ஒரு கருவுற்ற,மனம் பிறழ்ந்த பெண்ணுக்கு வலியெடுத்து, அழகிய பெண் குழந்தை சாலையிலேயே பிறந்து விட்டதாம்.
அவளோ பிரசவம் முடிந்து உயிரை விட்டு விட்டாள்.
“ம்…யார் யாரோ குழந்தை வேணும்னு தவம் இருக்காங்க.பிறக்க மாட்டேங்குது.இந்தப் பைத்தியக் காரச்சியை யாரோ ஏமாத்தி, இதோ பாருங்க தங்க விக்கிரகம் மாதிரிக் குழந்தை ! பாவம்… அனாதையான இது என்ன பாடுபடப் போகுதோ?” _ கூட்டத்தில் ஒருவர் அங்கலாய்த்தார்.
கணவன் அரவிந்த்தை அர்த்தமுடன் இவள் பார்க்க, அவன் புரிந்தவனாகப் புன்னகைத்தான்.
குழந்தையைத் தூக்கிக் கொண்ட பவித்ரா அதன் இறந்து போன தாயைப் பார்த்தாள்.
அவள் பச்சை மேக்ஸி அணிந்திருந்தாள்.
சென்னை

சின்ன கதை என்றாலும் மனதை தொட்டது அருமையை சகோதரி
நன்றி அக்கா
மிக சுவாரஸ்யமான கதை
பாராட்டுகள்
கதை அர்த்தமுள்ளதாக இருக்கிறது 👍👍
Good story 👍👍
Powerful story . வாழ்த்துகள்