
வால்ட் விட்மன் பார்த்து
வசன கவிதை எழுதிப் பார்த்தார் பாரதி
பாரதி இறந்த பிறகு
பத்தாண்டு கழித்து
அதுதான் க.நா.சு மனதில் பொறித் தட்டியது
வேறுவகைப் பாவாக
புதுக்கவிதை மலர்ந்தது
க.நா.சு காட்டிய வழிதான்
புதுக்கவிதை
பாரதியார் எழுதிய
வசன கவிதையை மறந்து விட்டோம்
ஆனால் புதுக் கவிதையைக் கண்டுபிடித்த
கநாசு பாரதிக்கு
நன்றிக் கடன் பட்டிருக்கிறார்
கவிதை உலகில்
மகா குருநாதர்
பாரதிதான்
