
படுக்கையறை கதவு திறந்த சப்தத்தில் விழித்த ரேஷ்மா, முகமூடித் திருடன் ஒருவன் கத்தியுடன் வருவதைப் பார்த்தாள்.
கணவரும் வீட்டில் இல்லை.
குழந்தை ரித்துவை அணைத்துக் கொண்டு தயாரானாள்.
வந்தவன் கத்தியைக் காட்டி செயினைக் கேட்டு மிரட்ட,
அவள் அதைக் கொடுக்க.. அவன் கையை நீட்டிய.. அந்த ஒரு நொடியில் ரேஷ்மா அவனது நெஞ்சில் ஓங்கி ஒரு மிதி விட, சரிந்து, மயங்கி விழுந்தான்.
ரித்துவை தழுவிக்கொண்டு ரேஷ்மா நிதானமாக சொன்னாள்..
“வீரம் ஆண்களுக்கு மட்டுமில்ல.. பெண்களுக்கும் பொருந்துகிற உடல் லட்சணம்தான்..”
****
