அழகியசிங்கர்/அப்பா சொன்னது சரி

சிற்பி முருகேசனுக்கு எந்த விதத்திலும் திருப்தி ஏற்படவில்லை. அவர் சிதையில் வார்த்த அந்த உருவத்தை உருவாக்கும் போது கண்கள் மட்டும் கொடூரமாகத் தெரிந்தன.

ஏன் சரியாய் வரவில்லை ? ஒரு அறையில் அந்த வார்ப்பை மூடி வைத்து விட்டு, அந்த இடத்திலிருந்து வந்து விட்டார். யாருடைய முகம் இது?
ஏன் சரியாய் இல்லை?

அதே நினைவாக இருந்ததனால் அவரால் சாப்பிட முடியவில்லை.
“ஏன்?” என்று அவர் மனைவி கேட்டாள்.
“அந்தக் களிமண்
சிற்பம் சரியாய் வரவில்லை,” என்றார் சோகத்துடன்.
“அப்பாவைப் பார்த்துக் கேளுங்கள்.” என்றாள்.
அதுதான் சரி என்று பட்டது.
அம்மாவும் அப்பாவும் தனியாக ஒரு இடத்தில் வசித்து வந்தார்கள்.
அப்பாவை அழைத்துக் கொண்டு வந்து தன் சுடும் சிற்பத்தைக் காட்டினார்.
அவர் பார்த்துவிட்டு, “அது உன் முகம்,” என்றார்.