
அழகியசிங்கர்
புனித ஜோதி
இதயம் திருடிய கள்ளன்
உறக்கம் கலைந்த இரவுகளில்
மினுக்கித் திரியும் நட்சத்திரக்கூட்டங்களுக்கு
இசைத்துக் காட்டுகிறான் கலைஞன்
தலையசைக்கும் ஒவ்வொரு நிமிடமும்
பறந்து சென்று அருகில் அமர்ந்து
ஏகாந்தத்தை உணரும்வேளையில்
அகம்தின்னும்
அப்படுத்தி
புறஅவமானங்கள்
ஓடிப்போவதாய் உணர்கிறாள்
இரவுநேரத்தில் வந்த இசைக்கலைஞன்
அதலபாதாள விடத்தை
முகர்ந்தெடுக்க வந்திருக்கும் தேவதூதனென
மனம் சமிக்ஞைகள் மொழிகின்றன
கைவிரல் பிடித்து
நடக்கத் தொடங்குகிறாள்
தனிமைக்குள்
அந்த இசைக்கலைஞன்
நேற்று படித்த கவிதைக்குள்ளிருந்தான்
என்றால் ஒப்புக்கொள்வீர்களா?
நன்றி : படி வெளியீடு – எண் 9, பிளாட் எண் 1080A, ரோஹிணி பிளாட்ஸ், முனுசாமி சாலை, கே.கே.நகர் மேற்கு,சென்னை 600 088 – பக்.120 – விலை 150
