
நான் ஒரு அடர்ந்த காடு வழியே நடந்துப் போய் கொண்டிருக்கிறேன்.
காரிருள் படர்ந்து கண்ணுக்கு எட்டிய தூரம் எதுவும் தெரியவில்ல.
பாழாய்ப் போன நிலவு கூட சதி செய்து விட்டது. ஓ! இன்று அமாவாசையா?
சுற்றும் முற்றும் விழித்து நோக்கினேன்.
கையில் பிடித்திருந்த சிறிய ஒளி மங்கிய டார்ச்சை இயக்கினேன்.
யாரும் இல்லை. கொடிய
விலங்குகள் கூட வெளியே வரவில்லை போல தோன்றியது.
கைவிளக்கை காட்டிய வண்ணம் தொடர்ந்து நடந்தேன்.
திடீர் என்று என்னை சுற்றிக் கயிறு வளயங்கள் ஒன்றின் பின் ஒன்றாக என்னைக் கட்டிப் போட்டது.
நின்ற இடத்திலேயே நின்றுவிட்டேன். நகர முடியவில்ல.
நான் ஏன் கைது செய்யப் பட்டேன்?
நான்கு முரட்டுக் கைகள் என்னை அலாகா நகர்த்திக் கொண்டு ஒரு திறந்த வாகனத்தில் தூக்கி போடுகின்றன.
யார் நீங்க?எதற்கு என்னைக் கட்டி,எங்கே கூட்டிப் போகிறீர்கள்?
அலறினேன்.
அலறி அடித்துக் கொண்டு கத்தியபடி கண்களை திறந்தேன்.
அப்பா !
நல்ல வேளை.
கனவு தான் என்று எழுந்து கண்ணாடியில் முகம் பார்த்தேன்.
பேய் அறைந்த முகம் தெரிந்தது.
10.12.2025

One Comment on “விஜயலக்ஷ்மி கண்ணன் /இது என்ன?”
Comments are closed.