நாபா.மீரா/பிரதானம்

தாயம்மாவுக்கு மனசே ஆறவில்லை. மாயாம்மாவுக்கு இந்தச் சின்ன வயசுல இப்படியொரு கொடிய நோயா?
தெனமும் ஏதோ கீமோவாமே…அது வைச்சு வைச்சு…முடியத்தனையும் கொட்டிச் போச்சாமே…
தினந்தோறும் நீளமா தலை பின்னி எவ்வளோ அழகா பூ வைச்சிருப்பாங்க.
நாதியில்லாம தெருவுல கிடந்த நம்மளுக்கு நாளும் வேளையும் தவறாம சாப்பாடு கொடுத்தாங்களே..,
ஒரு முடிவுடன் எழுந்தாள்.
கதவை திறந்த மாயாவின் கணவன்….அம்மா இல்லையேம்மா எனக் கையில் கிடைத்த பணத்தை சாப்பாடு வாங்கிக்கொள்ளக் கொடுக்க…
ஐயா….தப்பா நெனைக்காம இதை வாங்கி நம்ம மாயாம்மா முகம் பழைய களையோட மாற வழி செய்ங்கய்யா….
தாயம்மா கொடுத்த பையை வாங்கியவன் அப்பொழுதுதான் முக்காடு போட்டிருந்த அவள் தலையைக் கவனித்தான்.
பையில் சீராக வெட்டப்பட்ட முடிக்கற்றைகள் அசைந்தன.

விஜயலக்ஷ்மி கண்ணன் /இது என்ன? – விருட்சம் நாளிதழ்

One Comment on “நாபா.மீரா/பிரதானம்”

Comments are closed.