
இரவுகளை ஆகச் சிறந்த பொழுதாக அவன் வைத்திருந்தான்.
ஒவ்வொரு இரவும் கனவுகளை அவனுக்கு ஒரு நண்பனைக் போல தினமும் பரிசளித்தன.
கனவுகளை வரைந்து வரைந்து ரசிப்பதும் கொண்டாடித் தீர்ப்பதும் பொழுது போக்காக இருந்தது அவனுக்கு.
அன்றைக்கு ஏதோ மிகுந்த மன அழுத்தத்தடன் புரண்டு கொண்டே கிடந்துவிட்டு எழுந்தது போலவே அவனுக்கு தோன்றியது.
லேசான கனவு வந்தது போலவும் அதனை வரைந்து பார்க்கவும் உட்கார்ந்தான்.
பெண்ணொருத்தி இறுக்கமாகக் கட்டப்பட்டிருப்பதைப் போலவும், கையில் ஏதோவொரு நீண்ட ஆயுதம் கொண்டு அதை அறுத்து எறிவதற்காக அங்குமிங்கும் உடலை அலைத்து முயற்சி செய்வது போலவும் ஓவியம் வந்திருந்தது.
தன் கனவைத் தொட்டு தொட்டு வரைந்த அந்த ஓவியம் இனம்புரியாத விடுதலையை அவனுக்குத் தீர்ப்பளித்திருந்தது .
நாபா.மீரா/பிரதானம் – விருட்சம் நாளிதழ்
–

மிக்க நன்றி ஐயா
என் கதையை பிரசுரித்த விருட்சம் நாளிதழ் மற்றும் அழகிய சிங்கர் ஐயா அவர்களுக்கு என் நன்றி..