
“இப்படியேதான், எப்போ பார்த்தாலும் பண்றா”
வந்ததில் இருந்து புலம்பித்தீர்த்தார் நண்பர்.
“வீடெல்லாம் கிறுக்கல் “
இப்போதும் அந்த பாப்பா எங்கள் வீட்டு சுவரிலும் வரைய ஓடியது.
“ஸ்கூல் புக், நோட்டு எல்லாம் கிறுக்கல்”
அவர் போட்டிருந்த சட்டையிலும் ஓவிய சுவடுகள் இருந்தன.
பெண்ணின் கையெல்லாம் பேனா மை.
ஒரு தாளையும் பேனாவையும் கொடுத்தேன்.
மிக வேகமாக ஆனால் அழகாக ஒரு பெண் படம் வரைந்தாள்.
“போதும் போதும்… கிளம்பலாம்” என்றார்.
அந்த குழந்தை முரண்டியது.
“கலர் குடுக்கணுமாம்… அங்கிள் வீட்ல கலர் இல்லை, இன்னொரு நாள் கொடுக்கலாம் வா”
ஆட்டிஸம் பாதித்த அந்த குழந்தை அடுத்தவாரம் உடல் சரியில்லாமல் இறந்துபோனது.
நிஜமான துக்கத்துடன் கலந்துகொண்டு வீடு திரும்பினேன்.
அந்த படத்தை எடுத்து பார்க்கத்தோன்றியது.
உடல் நடுங்கியது எனக்கு.
அந்த ஓவியத்தில் பெண்ணின் உடைக்கு பச்சை நிறம் பூசப்பட்டிருந்தது.
என் வீட்டுக்கு அந்த பாப்பா பச்சை கவுன் போட்டுதான் வந்திருந்தாள்.

மனதைப் பிசைகிறது