விஜயலக்ஷ்மி கண்ணன் /இவள் ஒரு கவிதை

கை வளையலில் இருந்து
உதிர்ந்த வெண்முத்துக்கள் போல்
முத்து முத்து சொற்கள் கவிதையாமது
அழகு .

கருமேகக் கூந்தலில் ஒற்றை நிலவாக
வெள்ளை ரோஜா
புன்னகை சிந்தியது ஓர் அழகு.

தேவியோ ,தேவதையோ சொல் நீயே,
மேவிய காதலால்
தான் அப்படியோ?

தமிழ்த் தேன் ஊறும் இதழ்கள்
பருகிட அலைபாயும் வண்டினம் நான்.

கண்களில் ஜொலிக்கும் ஒளி
நெருங்கினால் உருக்கிடும் அனல்
இயலுமா?

நிலவு வந்ததும்
நிலமகள் கனிந்து
மலர் அம்பு எய்திடுவேன்.
கவிதை மாலை சூட்டிடுவேன்.