சுரேஷ் ராஜகோபால்/அம்மாவாம் அம்மா

14 11 2025 அன்று மாலை இணையக் கவியரங்கில் படித்த 4வது கவிதை

மயங்கி விழுந்த அம்மா
பக்கத்து மருத்துவமனையில்
அவசரப் பிரிவில் அனுமதி
உறவினர் அனைவரும்
வெளியே நிக்க விட்டு
பின்னர் உட்கார வைத்து
மருத்துவம் பார்த்தனர்
மகன் மட்டும் உள்ளே
சென்று பார்க்க அனுமதி தந்தனர்
அழுதபடி வெளியே வந்த
மகனை உறவினர்
சூழ்ந்து கொண்டு
நிலைமையைக் கேட்டனர்.
“பிழைச்சுட்டாங்க ” என்ற போதும்
கண்ணீர் விட்டான்
“ஆனந்தக் கண்ணீராம் அது “