
“சற்று மெல்லத்தான் அந்த கட்டுகளைப் போட்டுத் தொலையேன்”.
வரைந்து கொண்டிருந்த ஓவியம் சொன்னதைக் கேட்டு அதிர்ச்சியில் தூரப் போய் தலை குப்புற விழுந்தான் அவன்.
முந்தைய இரவு குடிபோதையில் வண்டி ஓட்டியபோது எதன் மீதோ மோதிவிட்டு நிற்காமல் வந்தது லேசாக நினைவுக்கு வந்தது. அவன் வரைந்த கட்டுகள் அவனையே இறுக்கத் தொடங்கியபோது நினைவு அவனிடமிருந்து நழுவத் தொடங்கி விட்டிருந்தது. கூடவே அவன் மூச்சும்.

One Comment on “அனுராதா ஜெய்ஷங்கர்/கட்டுகள்”
Comments are closed.