சுஸ்ரீ/என்னை விட்டுப் போகாதே

அம்மா அப்பா கிட்ட சொல்றதை ராமு ஹோம் ஒர்க் பண்ணிட்டே கேட்டுட்டு இருந்தான்.”ரேணுவுக்கு காலாகாலத்துல ஒரு கால்கட்டு போட்டு அனுப்பிடணும் 24வயசாச்சு
இன்னும் சின்னக் குழந்தையா என்ன?”
ராமுவோட அக்கா ரேணு டிகிரி முடிச்சிட்டு வீட்ல இருக்கா.ராமுவோட படிப்புக்கு ஹெல்ப் பண்றேன்னுட்டு ரொம்ப ஹிம்சை பண்றா,அடிக்கறா, அவளைக் கண்டாலே ராமுவுக்கு பிடிக்கலை.
அம்மா அப்பா கிட்ட சொன்னது கேட்டு ரொம்ப திருப்தி.மளமளனு தன் டிராயிங் நோட் எடுத்து அந்தப் படத்தை வரைந்தான். வண்ணமும் பூசினான்.அக்கா ரேணு யார் கூடவோ ஃபோன்ல பேசறா.
அம்மா சமையலை முடிச்சிட்டு கூடத்துக்கு வந்தா.ராமு,”அம்மா இதைப் பாரேன்”
“என்னடா படம் இப்படி யாரையோ
கட்டிப் போட்ட மாதிரி கிறுக்கி இருக்கே”
“அப்பா கிட்ட காலைல சொன்னயே அக்காக்கு கால் கட்டு போடணும்னு, கால்மட்டும் போறாது என்னை குச்சியால அடிக்கற கையையும் கட்டணும் அதான்.”
அம்மா சிரிச்சா,”உனக்கு நல்லதுக்காக லேசா பயம் வரமாதிரி தட்டுவா அவ்வளவுதானே”
“போம்மா”
ரேணுவுக்கு அடுத்த வாரம் கல்யாணமாம். எங்களையெல்லாம் விட்டுட்டு போயிடுவாளாம். வேண்டாம்க்கா நீ வேணும் எனக்கு. லேசா வலிக்காம குச்சில அடிச்சிக்கோ,பரவாயில்லை, என்னை விட்டுப் போகாதே.

அனுராதா ஜெய்ஷங்கர்/கட்டுகள் – விருட்சம் நாளிதழ்

4 Comments on “சுஸ்ரீ/என்னை விட்டுப் போகாதே”

  1. அதுதான் சகோதர பாசம்.. அதை அழகாக சுவாரஸ்யமாக இந்த குட்டி கதையில் கொண்டு வந்திருக்கிறீர்கள்

  2. நீரடிச்சி நீர் விலகுமா? கூடப் பொறந்த பாசம் குறையவே குறையாது. அந்தப் படத்திற்குப் பொருத்தமான கற்பனை. குடும்பக் கதைகளுக்கு உங்களை விட்டா இப்போ தமிழ் நாட்டுல ஆளே இல்லை.

Comments are closed.