ரவி அல்லது./சாத்தியத்தின் திறப்பு

உருக்குலைந்த மனதில் வீட்டிலிருந்த எல்லோரும் எவருடைய முகத்தையும் எவரும் பார்க்கத் தயங்கினார்கள். அதுவொரு பிணக்கூடமாக இருந்தது என்று சொன்னாலும் மிகையில்லைதான்.
நடந்து போன நிகழ்வு சரியென தோன்றினாலும் வாழும் சூழலின் துயரம் அவர்களை வெளிக்காட்ட முடியாமல் நோக வைத்தது. இதற்கு முன் தலைமுறைகள் இதை நினைக்க முடியாத அவலத்தில் இருந்தார்கள்.
கருப்பனை முச்சந்தியில் கட்டி வைத்து அடித்துத் துவைத்த பின்பு தூக்கில் தொங்கிவிடத்தான் அவர் நினைத்தார். மானத்தோடு வாழப்பழகியவர் அல்லவா. மருதாயிதான் சொன்னாள்.
“உசுரு சாமிக் குடுத்தது.செதைச்சாலும் செத்தாலும் இங்கதான் கிடக்கனும்.அதுதான் அடுத்த தலைமுறைக்கு நாம செய்கிற உபகாரம்” என்றாள்.
கருப்பனுக்கும் வீட்டில் இருந்தவர்களுக்கும் மருதாயின் பேச்சு ஆறுதலாக இருந்தது.
அப்படியொன்றும் கொலை பாதகச் செயல் எதுவும் நடந்துவிடவில்லைதான். தனிச்சுடுகாட்டுப் பிரச்சினையே முடிவுக்கு வராத ஊரில் இந்தப்பக்கம் படித்த பையனும் அந்தப் பக்கம் படித்த பெண்ணும் நாகரீக வாழ்க்கையில் இங்கு வாழப்பிடிக்காமல் ஏதோவொரு நகரத்திற்கு ஊருக்குத் திரும்பி வராமலையேப் போய்விட்டார்கள்.
முன்பொருமுறை நடந்ததில் தடயங்களே இல்லாமல் சாம்பலாக்கிவிட்டுதான் ஊர் தன் கோர முகத்தை மறைத்துக்கொண்டு பவுசு காட்டிக்கொண்டு இருக்கிறது.
“பொண்ணு மாப்பிள்ளை தட்டுப்பாடு அதிகமாகிக்கிட்டிருகிறதாலே. இதெல்லாம் சகஜம்ன்னு ஒரு நாள் ஆகும்.” என்று தன் பேரப்பிள்ளைகளை ‘எப்படியாவது படித்துவிடுங்கள்’ எனச் சொல்லியபடியே தூங்க வைத்தாள் மருதாயி.
குடிசையின் தட்டிக்கதவை யாரோ தட்டுவது கேட்டது. அந்தத் தட்டலின் தொனிக்கு அவர்கள் போராடத் தன்னைத் தயாரித்து தான் இருந்தார்கள்.

5 Comments on “ரவி அல்லது./சாத்தியத்தின் திறப்பு”

  1. 🎉🎉🎉🎉🎉
    What a social theme with the agony of the suppressed in powerful words within the limited lines you have described in this story connecting with this modern picture depicting the agony of that family of wife and husband with grown up kids and children and dog lying on the ground with a hungry cow on the background in a disconnected structure of the bodies . The Title is also poetic Superb
    🙏🙏🙏🙏🙏🙏

Comments are closed.