மாலா மாதவன்/089654

கணினிச் சாலைகளில் இலக்கம் இலக்கமாய் நடந்து கொண்டிருந்தன அவைகள்.
“இன்று நம் மூதாதையர் திருவிழா! கொண்டாட வேண்டாமா?” கேட்டது 065886
“ஆமாம். கொண்டாட வேண்டும். இந்த மண்ணுலகத்தில் அவர்கள் கை கால் வயிறு தலை என
ஒரு அமைப்போடு இருந்தார்களாம். எனக்குள் அந்த விஷயத்தை பதித்திருக்கிறார்கள்.” என்றது 089654
“வேண்டாததை எல்லாம் சொல்வதே இந்த 089654 ன் வேலையாகி விட்டது. புவர் மெயிண்டனஸ்!” அலுத்துக் கொண்டது 065886.
சாலையில் ஓரத்தில் கூட்டம் இருந்தது. எட்டிப் பார்க்க.. ஆ! மூதாதையர்கள் படம்.
“என்ன இது தலை நீண்டு உடல் பெருத்து கால்களும் கைகளும் தாங்கு பொருள்களாய்.. நம்மைப் பார்..
அவர்களின் மேம்படுத்தப் பட்ட வெர்ஷன் ஜஸ்ட் அ பாக்ஸ். நோ கை, நோ கால், நோ தலை!” என்ற 065886 ஐப் பார்த்து..
“அஃப்கோர்ஸ் நோ மனம், நோ கண்ணீர்!’ என்றது 089654.
கேட்ட கணினி அதன் வயிற்றில் இருந்த உணர்ச்சிக்கான சிப்பைக் கழட்டி வீசியது.

ரவி அல்லது./சாத்தியத்தின் திறப்பு – விருட்சம் நாளிதழ்

2 Comments on “மாலா மாதவன்/089654”

Comments are closed.