
“மூன்று மாதமா வேலையில்ல.. சேமிப்பெல்லாம் காலியா போச்சு.. அழுற குழந்தைக்கு பால் கூட வாங்கிக் கொடுக்க முடியல.. அரளி விதையை அரைச்சிட்டு வர்றேன்.. குடும்பம் மொத்தத்துக்கும் நிம்மதி ஆயிடும்..” புலம்பினான் அவன்.
“நண்டு, சிண்டு வரைக்கும் உன்னோட குடும்பத்தில உள்ளவங்க பத்தி நீ முடிவு எடுக்கிறது ஒருபக்கம் இருக்கட்டும்..” என்று சொல்லி நிறுத்திய தாய்க்கிழவி தொடர்ந்து கேட்டாள்..
“நம்மை நம்பி இந்த நாயும், பசு மாடும் இருக்குதே.. அதுங்களுக்கும் விஷம் கொடுத்திடப் போறியா?..”
ஒரு நிமிடம் திகைத்த மகன் சொன்னான்..
“அதுங்களை எங்காவது அனுப்பிட வேண்டியதுதான்..”
தாய்க்கிழவி தீர்மானமாக சொன்னாள்..
“தோல்வியை கண்டு தற்கொலை பண்ணிக்கிறது கோழைத்தனம்.. நம்ம கிட்ட கையும், காலும் இன்னும் திடமா தான் இருக்கு.. மனசையும் திடமா வைச்சிக்கிட்டு தொடர்ந்து முயற்சிக்கலாம்.. காலம் ஒரு நாள் நிச்சயம் மாறும்..”
