நாபா.மீரா/அக்கரைப் பச்சை

கணவன்,மனைவி… குழந்தைகள் அங்கொன்றும் இங்கொன்றுமாய் அவர்களுடன் பிணைந்து பசியால் சுருண்டு கிடக்க… அதே பகுதியில் ரோட்டோரமாய் நாய் ஒன்று படுத்த நிலையில்…மேய்வதற்கு புல் இல்லாமல்…. பேப்பர் குப்பைகளைக் கிளறிக் கொண்டு ஒரு பசு மாடு….
இப்படியாக…அந்த ஐந்தறிவு மற்றும் ஆறறிவு ஜீவன்கள் பசிப்பிணியால் வாடிக் கொண்டிருக்க….
ஊம்… இவங்களைப் பாரு… வீட்டு வாடகை,அவுட்டிங்,EMI…. ,எந்தப் பிரச்சினையும் இல்லாத நிம்மதியான வாழ்க்கை…
மூன்று குழந்தைகள், தவிர்க்க முடியாத நான்காவது குழந்தையாய் ஒரு நாய்க்குட்டி சகிதம்….பீச் சென்று ஆட்டோ ரிக் ஷாவில் வீடு
திரும்பிக் கொண்டிருந்த அந்த நடுத்தரக் குடும்பத்தின் தலைவன் மனைவியிடம் புலம்புகிறான்.
குழந்தைகள் மடியில் இருந்த நாய்க்குட்டி கூட…
நம்ம சாதி சனம் ஒண்ணு அங்க எவ்வளோ ஃப்ரியா இருக்கு….
ஏய்…. எழுந்திரு… போலீஸ்காரரின் லத்தி அடியில்…அந்தக் குடும்பம் வாரிச் சுருட்டிக் கொண்டு ஓட….
நாய் பிடிக்கும் வேன் வந்து தெருவில் இருந்த நாயை சங்கிலி போட்டு கட்டி இழுத்துச் சென்றது.
கண நேரத்தில் மாறிய இந்தக் காட்சியைக் காண அந்த ஆட்டோ அங்கு இல்லை.

உஷா சங்கரநாராயணன்/வீடு – விருட்சம் நாளிதழ்