
அந்த மாடர்ன் ஆர்ட் கேலரியின் ஒரு பக்கம் மட்டும் கூட்டம் அதிகமாகவும், பரபரப்பாகவும் இருந்தது.
என்ன என்று விசாரித்தேன்.
ஒவ்வொருவரும் 50 ரூபாய் டிக்கெட் வாங்கிக் கொண்டு உள்ளே சென்று கொண்டிருந்தார்கள்.
“உள்ளே ஒரு படம் இருக்கிறது. ஓவியர் அதை என்ன நினைத்துக் கொண்டு வரைந்திருக்கிறார் என்று நீங்கள் அங்கு ஐந்து வரிகளில் டைப் செய்ய வேண்டும். உங்களது விடை அவர் எண்ணத்துடன் ஒத்துப் போனால் உங்களுக்கு ஐந்து லட்ச ரூபாய் பரிசு” என்றார்.
“ஒருவருக்கு மேல் சரியான விடை சொன்னால் என்ன ஆகும்?” என்று கேட்டேன்.
“ஒரு முறை சரியான விடை சொன்னவுடனே இது முடிந்து விடும்” என்றார் அவர்.
“இது முடிந்தால் வேறு ஒரு படம் வருமா?”
“தெரியாது”
” இந்த ஓவியம் எத்தனை நாளாய் இருக்கிறது?”
“இரண்டு மாதங்களாய்…”
“எனக்கு ஒரு டிக்கெட் கொடுப்பா”

அருமை, ஸ்ரீராம். ரொம்ப வித்தியாசமான சிந்தனை.
ரசித்தேன்.
கீதா
நன்றி கீதா. ” லாட்டரியா? எனக்கு வேண்டாமப்பா” என்று அவர் வேகமாக விலகினார்’ என்று கூட கதையை முடிக்கலாம்!
நன்று.
நன்றி KGG.