ஜி. குமார்/தாயகம்

உலர்ந்த துணியால் அந்த நேர்த்தியான பீங்கான் தட்டுக்களையும் கோப்பைகளையும் நாதன் துடைத்து முடித்தபோது அவை தங்கமாய் பளபளத்தன. வேலைப்பாடுகள் மிகுந்த அவை இன்று அதிக அழகுடன் மிளிர்வதுபோல் நாதனுக்குத் தோன்றியது. அவருக்கு நன்றாக நினைவிருந்தது. ஐந்து வருடங்கள் முன் டோக்கியோவில் ஒரு மாநாட்டிற்குச் சென்றபோது வாங்கியது. ஒவ்வொரு மாதமும் அவர் வீட்டில்
விருந்தாளிகள் கூடும்போது மனைவி பிரேமாவை அவற்றைத்தான் பயன்படுத்தச் சொல்லி வற்புறுத்துவார். விருந்தாளிகளும் அந்த சேகரிப்பைப் பாராட்டத் தவறியதில்லை……….

என் பங்கும் என்ன சாதாரணமா என்று கேட்பதுபோல் அந்தத் தானியங்கி பாத்திரம் துலக்கும் உபகரணம் சிறிய μசையை எழுப்பிப் பணியை முடித்துக்கொண்டிருந்தது. நாதன் அதைச் செல்லமாகத் தட்டிக்கொடுத்தார்.
பாத்திரங்களையும் அழகாக அலமாரியில் அடுக்கி வைத்தார். கனக் கச்சிதமாக அந்தச் சிறிய சமையல் அறை தூய்மையாகத் தொடங்கியிருந்தது. அந்தச் சிறிய இடத்தில் எப்படி பத்து நபர்களைச் சமாளிக்கப்போகிறோம் என்று முன்பெல்லாம் வரும் மலைப்புகள் அவர்களுக்கு இப்போதெல்லாம் வருவதில்லை… அந்த வரையறைக்குள் வாழ்க்கை நகர்ந்துகொண்டிருந்தது.

நாதன் கண்ணாடி ஜன்னலின் வெளியே நோக்கினார். பனி மூட்டம். பார்வை சில அடிகளே அந்த வெண்பனியை ஊடுருவ முடிந்தது. லண்டன் நகரின் யல்பு வாழ்க்கை ! உள்புறம் ஹீட்டர்கள் கதகதப்பைத் தந்தாலும் தங்க¨ளையே கொஞ்சம் சமைத்துக்கொள்கிறோமோ என்ற ஐயம் நாதனுக்கு எழுவதுண்டு.

சிரித்துக்கொண்டார்….
‘டார்லிங் ! உங்கள் வேலை முடிஞ்சுதா… ? ‘
துணி வெளுக்கும் இயந்திரத்துடன் போராடிவிட்டு பிரேமா கேட்டுக்கொண்டே வந்தாள்.
சிரித்துக் கொண்டே தலையை ஆட்டிய நாதன் முதன்முறையாகப் பார்ப்பதுபோல் மனைவியை நோக்கினார். அந்த பதினைந்து வருட லண்டன் தாம்பத்தியத்தில் அவள் ஒரு ஆங்கிலேய மாதுவாகவே மாறியிருந்தாள். காதுத்தோடும் மாங்கலியமும் மட்டுமே எந்தப் புலனிலிருந்து பெயர்ந்தவர்கள் என்பதை அவ்வப்போது தெரிவித்துக்கொண்டிருந்தன.
‘குழந்தைங்க தூங்கியாச்சா… ? ‘ படுக்கை அறையை எட்டிப்பார்த்தார்.
மறுநாளிலிருந்து விடிகாலையில் எழுந்து ட்யூப் ரெயிலைப் பிடித்து μடும் பரப்பரப்பை எதிர்கொள்ள இரண்டு குழந்தைகளும் அமைதியாகத் தூங்கிக்கொண்டிருந்தார்கள்.
‘இன்னிக்கு ராத்திரி உங்க உதவி ஒன்னும் வேண்டாம் ‘
பிரேமா பின்னால் பார்க்காமலேயே சொன்னாள்.
சைப்படாமல் வந்துனின்ற நாதனின் வெப்ப மூச்சுக்காற்று அவள் முதுகைத் தொட்டிருக்க வேண்டும்.
அன்றாடம் இரவு காய்கறிகள் அரிந்து தருவது அவர் வழக்கம்.
‘நாளைக்கு காலையில் உங்களுக்கு ஆனா இன்னிக்கு மிஞ்சியதுதான்… ‘
பிரேமா சொல்லும்போதே நாதன் புன்முறுவலுடன் தலையை அசைத்தார்.
‘நான் ஒழிச்சுவச்சுட்டு வரேன் ! நீங்க படுத்துக்கங்க ! ‘
கணவர் நகராததைக் கண்டு பிரேமா மேலும் சொல்ல வேண்டியதாயிற்று !உறக்கம் வாராமல் நாதன் படுக்கையில் புரண்டுகொண்டிருந்தார். அழைப்பை ஏற்று விருந்திற்கு வந்த அவரது கம்பெனி நிர்வாக இயக்குனர் தாம்சன் கூறிய வார்த்தைகள்தான் அவன் காதில் ரீங்காரமிட்டுக் கொண்டிருந்தன.
‘நாத்! அலுவலக சமாசாரங்களைப்பற்றிப் பேசி உங்கள் விருந்தின் களிப்பைக் கெடுக்க விரும்ப வில்லை ! நமது ஆசியா மண்டலத்தின் செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லை. நாளை அலுவலகத்தில் விவரமாகப் பேசுவோம் ! ‘
தாம்சன் சுருக்கமாக அவர் காதைக் கடித்திருந்தார். அவர் நெற்றிச் சுருக்கங்கள் அவர் அதுபற்றி எப்படியெல்லாம் யோசனை செய்துகொண்டிருப்பார் என்று யூகிக்க நாதனுக்கு அதிக நேரம் பிடிக்கவில்லை.
இருபது வருடம் அதே கம்பெனியில் வெவ்வேறு நிலைகளில் அலுவல். நேர்மையான திறமையான அதிகாரி என்ற பெயர். ஒரு மண்டலத்திற்குத் தலைமை அதிகாரியாகத் தகுதி வந்துவிட்டது என்று அனைவரும் அவரைப்பற்றி பேச நாதன் கேட்டிருக்கிறார். இப்போது ஆசியாவின் பெரிய நாடான இந்தியாவைப் பற்றிய அறிவு…..
நாதனுக்கு தாம்சன் எண்ண μட்டங்கள் எப்படியிருக்கும் என்பதைக் கற்பனை செய்யத் தேவை யில்லாமல் இருந்தது.

வயிற்றில்தான் சங்கடம்.
‘நேத்திக்கு விருந்து சாப்பாட்டைச் சாப்பிட்டதிலேந்து உங்க முகமே சரியில்லை ! வயித்துப் பிரச்சனையில்லையே ? வீட்டிலேயே வேணும்னா இருந்திடுங்களேன் ! ‘
மறுநாள் காலையில் அவர் கிளம்பும்போது பிரேமாவின் கரிசனம் எழுந்தது.
‘ இல்ல ! இல்ல ! தாம்சனோட வேற இன்னிக்கு மீட்டிங் இருக்கு !
நீள அங்கி அவரைப் போர்த்திக்கொள்ள மடிக்கணினியுடன் விரைந்தார்.
கூட்டத்தில் கரைந்து மடிக்கணியுடன் லி·ப்டில் ஏறி காலை வந்தனம் தெரிவித்தவர்களுடன் புன்முறுவலைப் பகிர்ந்துகொண்டு இருக்கையில் அமரும் வரை தாம்சன் மனதில் என்ன இருக்கும் என்பதுதான் நாதனை வதைத்துக் கொண்டிருந்தது. இருபது வருடங்களில் கலியாணம் ஒரு சின்ன வீடு, குழந்தைகள் என ஒருவிதமாய் செட்டில் ஆகியாச்சு… நாதன் பெருமூச்சு விட்டார்.

தாம்சனின் காரியதரிசி புன்முறுவலுடன் எந்த நேரத்திற்கு அவர் தாம்சனைப் பார்க்க வேண்டும் என்பதைத் தெரிவித்துச் சென்றாள்.
தாம்சனின் வியாபார நுணுக்கம் அலாதியானது. அலசுவதில் நிபுணர். நாதன் அனேக குழு விவாதங்களில் கண்டிருக்கிறார். அவர் பேசுவதைக் கேட்கும் போதெல்லாம் நாதனுக்கும் புத்திக் கூர்மை அதிகமாவது போலிருக்கும். இன்று தாம்சன் விவரமாக் கூறியது என்னவோ நாதனுக்குச் சற்று கசப்பாக இருந்தது.
‘… இவ்வளவு விழுக்காடு விற்பனை குறைந்திருக்கிறது. செலவீனங்கள் அதிகம். நிகர் இலாபம் குறைவு. அதிகப் பட்டறிவுடன் உண்மையாக உழைக்கும் ஒருவர் அங்கு தலைமை அதிகாரியாக இருப்பது நம்ம கம்பெனிக்கு நல்லது. இதுவரை இருந்தவரை வீட்டிற்குப் போகச் சொல்லிவிட்டோம்.
தலைமை அலுவலகம் மும்பையில் இருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியும். இந்தியரான உங்களை அந்தப் பணிக்கு நியமிப்பது என்று முடிவு செய்திருக்கிறோம்….’
தாம்சன் சுருக்கமாக முடித்திருந்தார். நாதன் எதிர்பார்த்ததுதான். சின்ன வயதில் இந்தியாவில் இருந்தபோது ஒரு முறை மும்பை போன நினைவு ! ஜன நெருக்கமும் உள்ளூர் இரயில் போக்குவரத்தும் அவரை மலைக்க வைத்திருந்தது என்னவோ உன்மை. ஒரு தமிழனுக்கு அங்கு மொழிப் பிரச்சனை யென்றால் தாம்சன் இடிச்சிரிப்பு அவரை ஏளனம் செய்யும்…

வார்த்தைகள் வெளி வராமல் நாதன் நா உலர்ந்துகொண்டிருந்தது.’ .. நாத்! தன்னம்பிக்கை அவசியம் இதை ஒரு அறைக்கூவலாகவும் எடுத்துக்கொள்ளுங்கள். உங்கள் வெற்றி உறுதி ! என் இடத்தில் நீங்கள் இருந்தாலும் இந்த முடிவைத்தான் எடுத்திடுப்பீர்கள்…’
குரலைச் சற்று இறக்கிக்கொண்ட தாம்சன், ‘ உங்கள் குடும்பம் பற்றிய அனைத்துக் கவலையையும் விட்டுவிடுங்கள். கம்பெனி எல்லாவித உதவியும் செய்யும் ” என்று முடித்துக்கொண்டு காரியதரிசியை அழைத்தார்.
அதிக நேரமும் வேறுவழியும் இல்லை என்பது புரிய நாதன் எழுந்தார்…
கம்பெனியின் அந்த மிகப் பெரிய கிளையின் நிலைமையை சீர்திருத்த சில மாதங்கள் ஆகலாம்… ஒரு நாளைக்கு பத்து பன்னிரண்டு மணி நேரங்களுக்கு மேல் உழைக்க வேண்டியிருக்கும்… ஏகப்பட்ட பிரயாணங்கள், குழு விவாதங்களைத் தவிர்க்க இயலாது..கூடவே மன உளைச்சல்கள்… குடும்பத்தை லண்டலினிலேயே விட்டு விட்டுப் போக வேண்டியதுதான். எவ்வளவு சீக்கிரம் திரும்ப முடியும் என்று
பார்க்க வேண்டும்…

நாதன் சிந்தனை வாய்ப்பட்டவராய்த்தான் வீட்டில் காலடி எடுத்து வைத்தார்..
கம்பெனியின் முடிவைத் தெரிவித்தபோதுகூட பிரேமா அதிகம் கலங்கவில்லை. நீங்கள் இங்கேயே இருங்கள் என்று நாதன் கூறியபோதுதான் பத்ரகாளியானாள்.
‘ உங்களை விட்டுவிட்டு நாங்க தனியா எப்படி… ? சர்க்கரை வியாதி வேற கொஞ்சம்
தலைகாட்டியாச்சு ! தனியா எப்படி சமாளிக்க முடியும் ? மும்பை மாதிரி இடத்தில குழந்தைங்களுக்கு எப்படியும் இண்டர்நேஷனல் ஸ்கூல் இருக்கும். சமாளிக்கலாம்…. ‘
பிரேமா தன் முடிவில் உறுதியாகவும் இருந்தாள்..
மும்பை ஏர்போர்ட்டிலிருந்து வெளியே வந்து காருக்கு நிற்கும்போதுதான் குழந்தைகளுக்கு அந்த உப்புசமும் வியவைப் பெருக்கமும் புரிந்தது. ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டார்கள். முதல் இரண்டு நாட்கள் ஒரு நட்சத்திர விடுதியில் அவர்களைத் தங்க வைத்த நிர்வாகம் பின்னர் அவர்களுக்கு என்று ஒதுக்கப்பட்ட அடுக்குமாடிக்கட்டிட வீட்டில் குடி பெயர உதவி செய்தது.
இரண்டாயிரம் சதுர அடி இருக்கலாம். பசை உள்ளவர்கள் மத்தியில் பெரிய வளாகத்தில் வசதியாய் கம்பெனி குடியேற்றியிருந்தது. குழந்தைகள் முகத்தில்தான் இன்னும் பீதி குறையவில்லை.
‘ உங்களை அழைத்துச் செல்ல காலை ஒன்பதுமணிக்கு கார் வரும் டிரைவருக்கு ஆங்கிலம் தெரியும். கவலை வேண்டாம். வீட்டிற்கு வேண்டிய உதவியும் செய்துவிடுவோம். … ‘
அலுவலக நிர்வாகி தொலைபேசியில் தெரிவித்தபோது நாதன் நன்றி தெரிவித்தார்.
காலையில் ஒரு பென்ஸ் கார் வந்து நின்றது. கதவைத் திறந்துவிட்ட டிரைவர் ஆங்கிலத்தில் வணக்கம் சொல்லி தன் மராட்டிப் பெயரையும் பவ்வியமாகச் சொன்னான். ஒரு மத்தியனிலைக் காரே போதுமானதாக இருந்திருக்கும்.. மனதிற்குள்ளேயே நாதன் சொல்லிக்கொண்டார்.
அரைமணிக்கு மேல பயணம் நீடிக்கவில்லை. இறங்கும்போதுதான் ‘ சார் ! சார் ! ‘ என்று டிரைவரும் μடிவந்தார்.
‘உங்க லேப்டாப்பைக் கொடுங்க ! நான் வந்து ஆபீஸ்ல தர்ரேன் ! ‘
நாதன் பதிலையே எதிர்பாராமல் அவரிடமிருந்து வாங்கிகொண்டு நகர்ந்தான். முன்னால் ஏதோ துரை ஒருவனுக்கு வேலை பார்த்தானாம். ஒரு இந்திய அதிகாரிக்காக பணி புரிவதில்தான் அவனுக்கு எவ்வளவு ஆனந்தம்… !
நாதனுக்குப் புதிதாக இருந்தது.
சற்றே விசாலமான அலுவலக அறை !சிறிது நேரத்தில் இடைவெளியில் வராந்தாவில் காப்பி உமிழும் இயந்திரத்தைத் தேடிச் சென்ற போதுதான் காரியதரிசி பின்னாலேயே வந்து அவரை அவர் அறையிலேயே. அமரச் செய்தான்.
சில நிமிடங்களில் சீருடையுடன் பட்லர் ஆஜர் !! நாதனுக்கு ராஜ உபசாரமாகத் தெரிந்தது.
நாதனுக்கு அவர்களிடம் தன் லண்டன் வாழ்க்கையைப் பகிர்ந்துகொள்ளவேண்டும் போலிருந்தது. ஒரு மணி வாக்கில் பிரேமாவும் தொலைபேசியில் அழைத்தாள்.
‘சமையல், வீடு துடைக்கன்னு எல்லா வேலைக்கும் ஆள் வச்சாச்சு ! இன்னிக்கு உங்களுக்கு சாப்பாடுகூட நான் வீட்டிலேந்தே அனுப்பிச்சிட்டேன். நீங்க வெளிய சாப்பிட வேண்டாம். பிரேமாவின்
குரலில் உற்சாகம் கொப்பளித்தது.
‘அப்பறம் நீங்க எனக்கு ஒன்னும் வீட்டில உதவி செய்ய வேண்டாம். உங்க ஆபீஸ் வேலையைக் கவனிங்க. அதுவே போதும்…. ‘
பிரேமா தொலைபேசியில் கலகலத்தாள்.. நாதனுக்கு மனது கொஞ்சம் லேசானது போல் இருந்தது. இரண்டு நாட்களில் வாராந்திர விடுமுறையில் குழந்தைகளும் ஸ்விம்மிங் சூட்டுடன் விடிகாலையில் எழுந்து செல்வதை ஆச்சரியத்துடன் கவனித்தார்.
‘இங்க அவ்வளவு குளிரும் இல்லை ! இங்கேயே நாலைஞ்சு பசங்களைப் பிடிச்சாச்சு ! அவங்களோட தான் இந்த அமளி !’
பிரேமாதான் விளக்கம் அளித்தாள்.
மாத முடிவில் மூன்று நாட்கள் சேர்ந்தாற்போல விடுப்பு வந்தது.
‘ஷீரடி சாயிபாபா சன்னதி நாலைந்து மணி நேரத்தில் போகலாம். மனசுக்கு சாந்தி கிடைக்கும்.
ஒருநாள் தங்கிட்டு வரலாம்.’
டிரைவர்தான் தயங்கித் தயங்கி கருத்து தெரிவித்தான்.
‘உங்களுக்கும் ஆபீஸ் தொந்தரவிலிருந்து விடுதலை கிடைக்கும்.’
சொல்லியபடி பிரேமாதான் ஆவலுடன் தலையாட்டினாள்.
குழந்தைகளுக்கு நீண்டநேர கார்ப் பயணம் என்றாலே களிப்பு. நச்சரித்தார்கள். இரண்டு வண்டிகளையும் கூட்டி டிரைவர்களையும் வரச்சொல்லி மட்டை பந்துகளையும் குழந்தைகள் எடுத்து வைத்தபோது ஒரு பிக்னிக் போகும் மனோபாவம்தான் புலப்பட்டது.
டிரைவர்கள் குழந்தைகளைச் சமாளித்தவிதம்தான் அவருக்கு வியப்பை ஊட்டியது. ஷீரடி போய்ச் சேர்ந்தவுடனேயே தங்கியிருந்த விருந்தினர் மாளிகையில் விளையாடத் துடித்தனர். வழியில் அவர்களுக்கு அந்தத் தலத்தின் பெருமையை விவரமாக ஆனால் மெதுவாகச் சொல்லி தரிசனம் வரை சாரதிகள் முடித்து அழைத்து வந்தபோது தம்பதிகள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். ஒரு காரை லாகவத்துடன் μட்டும் திறன் அந்த எளியோர்களிடம் அப்போது வெளிப்பட்டது. மண்ணில் வேரூன்றிய கலாசாரம் பண்பு ஆன்மீகம் என்பவைகளை நாம் அதிகம் சொல்லித்தர முடியவில்லையே என்ற வருத்தம் தம்பதிகளிடையே ஒருசேர எழுந்தது.
திங்களன்று அலுவலகத்தில் நுழைந்த நாதனுக்கு மன இறுக்கம் அறவே நீங்கி புதிய தெம்பு பிறந்த உணர்வு ! எந்த பிரச்சனையும் சமாளிக்கலாம் என்ற துணிவும் சேர்ந்ததுபோல் ஒரு மிதப்பு.
கணிணியை உயிரூட்டயவருக்கு மாதம் பிறந்த நினைவு எழுந்தது. அவரையறியாமல் கை சம்பளப்பட்டுவாடா விவரத்திற்கு கணிணியை அலசத் தொடங்கியது.
ஹார்டுஷிப் அலவன்ஸ் என கடின வாழ்க்கை மேற்கொண்டதற்கு ஒரு பெரிய மாதத்தொகை அளிக்கப்பட்டிருந்தது !!! இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை ஒரு வாரம் குடும்ப சகிதம் லண்டன் வருவதற்கும் வழி செய்யப்பட்டிருந்தது. தாம்சன் அவருக்கு இன்ப அதிர்ச்சி அளிப்பதாகஇருந்திருக்கலாம்.
அவ்வளவு பெரிய கம்பெனிக்கு அது ஒரு பெரிய சுமையல்ல ! ஆனால் அங்கு
அலுவல் நிமித்தம் வசிப்பது ஒரு துன்பனிலை என்று அளவிட்டிருப்பது அவருக்குப் பெரிய வருத்தத்தைத் தந்தது.
வேலை நேரம் குறையவில்லை. பொறுப்பு கூடியிருக்க கொந்தளிப்புகளும் அதிகமாயிருக்கிறது.
தொழில் முறையில் அது வரவேற்கத் தக்கதுதான். ஆனால் வடிகாலாய் ஆன்மீகம் என்ற ஒரு அரிய வஸ்து. அடுத்த தலைமுறைக்கு விட்டுச் செல்லும் ஒரு கலாசாரம்… அவருக்கே அண்மையில் கிடைத்த விழிப்பு. இந்த மண்ணில் எப்படி வாழ்க்கை இடர்பட்டதாக இருக்க முடியும் ?
அமெரிக்க ஊதியமும் ந்திய மனைவியும் கிடைத்தவன் அதிர்ஷ்டசாலி என்பார்கள். அந்த வாய்ப்புடன் ‘ யான் கண்டனையர் என் இளையர் ‘ என்பதுபோல் சில சௌகரியங்களும் வேறு !
யோசிக்க யோசிக்க நாதனுக்கு வெட்கமாக இருந்தது.
ஐந்தரை மணி நேர இடைவெளிக்காக இருப்புகொள்ளாமல் காத்திருந்தார். மதியம் முதல் வேளையாக தாம்சன் காரியதரிசியை அழைத்து அவருடன் பேச விரும்புவதைத் தெரிவித்தார்.
‘ செலவுகளைக் குறைக்க நிறைய வழிகளை யோசித்து வைத்திருக்கிறேன் தாம்சன் ! முதல் வேலையாக எனக்கு ந்த ஹார்டுஷிப் அலவன்ஸ் வேண்டாம். ரண்டு மாதத்திற்கு ஒருமுறை லண்டன் வருவதும் அவசியமில்லை.. என்னிடமிருந்தே இந்தக் கட்டுப்பாடுகளை ஆரம்பிக்கிறேன்…’
நாதன் கூறி முடித்தபோது இடீ இடிப்பதுபோல் தாம்சன் சிரிப்பது கேட்டது.
‘ நாத் ! நீங்கள்தான் அங்கு தலைமை அதிகாரி ! உங்கள் முடிவுதான் என் முடிவும்…. “
பட்லர் பணியுடன் அவருக்கு வேண்டிய விகிதத்தில் காப்பியை வைத்து விட்டுச் சென்றான்.
சில வருடங்களுக்குப் பிறகு சேமித்த தொகையுடன் இந்தியா வந்து நிரந்தமாகத் தங்க வேண்டும். ஒரு சிறிய தொழிற்சாலையை தொடங்க வேண்டும். இது போன்ற எளியவர்களுக்கு வளர்ச்சியையும் வளமையையும் தர வேண்டும்…. இங்கு என்ன இல்லை…?
சிந்தனையுடன் நிதானமாக நாதன் காப்பியை உறிஞ்சினார்.
ஷீரடியிலிருந்து அவர் கொணர்ந்து மேஜைமேல் வைத்திருந்த சிறிய படத்திலிருந்து பாபா

One Comment on “ஜி. குமார்/தாயகம்”

Comments are closed.