
ஒரே பிரசவத்தில் பிறந்த நால்வரை ஆங்கிலத்தில்
க்வாட்ருப்லெட்ஸ் என்பார்கள். இந்த நால்வரில் ஒருத்திக்கு மட்டும் பேச முடியாது.
மற்ற மூவரும் பாடுவதில் வல்லவர்கள். பேச வராத பெண் சிறந்த நாட்டியக் கலைஞர்.
நால்வரும் சேர்ந்தே அனைத்து நிகழ்ச்சிகளிலும் பங்கேற்பார்கள்.
ஒரு நாள் சுகவீனமுற்ற நாட்டியம் தெரிந்த பெண்ணிற்கு உடல் நிலை மிகவும் மோசமாகியது.
ஒரு புது உத்தி தோன்றவே அவளுடைய காணொளி காட்சியைப் போட்டுக் காட்டி பாட ஆரம்பித்தனர்.
வழக்கம் போல் பாராட்டு . கிடைத்த பரிசுத் தொகையில்
அவளுக்கு உரிய சிகிச்சை அளித்து அவளைப் பிழைக்க வைத்தனர்.
மீண்டும் அந்த நால்வரின் வழக்கமான
நிகழ்ச்சிகள் புத்துயிர் பெற்று அரங்கேறத் துவங்கியது.

நேயம் நிறைந்த கதை