
பச்சையம்மாவின் கண்கள் எதிரில் விளையாட்டுப் போல் தன் கழுத்தில்
வளையமிட்டுக் கொண்டிருக்கும் சீலியை வெறித்தது.
ஒரு வயித்துப்பாட்டுக்கு ஓடா உழைக்காம உட்கார்ந்து திங்கன்னு வாக்கப்பட்டு வாழ வந்தேன். உண்டான சோறிருந்தும்
உட்கார நேரமில்ல. உட்காரும் வேளையில ஒரு பருக்கைச் சோறுமில்ல.
சொல்லானும் எடுபட்டுதா? குரல்வளையே கோவிந்தாவாம். பேச்சத்த பச்சையானேன். பெருமை மட்டும் சொந்தமாச்சு.
நாட்டாரு மனைவின்னு நாலுபேரு சொன்னாங்க. பச்சை குணம் தங்கமுன்னு பாராட்டாய்ச் சொன்னாங்க.
அத்தனை பேர் சொன்னாலும் கட்டினவன் சொன்னதில்ல. கொட்டி வைத்த பொருளோடு பொருளாய்த் தான் நானிருந்தேன்.
பச்சையம்மாவின் எண்ண ஓட்டத்தைக் கலைப்பது போல் சீலி..
“பாட்டி! இந்த கழுத்தாரம் பாரேன். எத்தனை சுத்துன்னு! போட்டுக்கறியா?” எனக் கழற்றப் போனாள்.
“வேண்டாம் தாயி! நான் குரல்வளை இறுக்கப்பட்டவள் தான்!”

அருமை அழகான கதை அசத்தல் நடையில்.
சுஶ்ரீ
சிறப்பான நடை