முனைவர் சிவகாமசுந்தரி நாகமணி/மூக்குத்தி முத்தழகி

அரவிந்திற்கு அந்தப் பெண் பவித்ராவை ரொம்பப் பிடித்திருந்தது.பழைமைக்கும் , புதுமைக்கும் பாலமிடுவதைப் போல அடக்கமாகவும், அதே சமயம் நாகரிகமாகவும் இருந்தாள்.ஒரே குறை…
மூக்குத்தி குத்தாமல் முகத்தில் ஏதோ வெறிச்சென்றிருந்தது.
அவன் அம்மா தீர்மானமாகச் சொல்லி விட்டாள்.அரவிந்த் ஏதோ காரணம் சொல்லி, பெண்களை நிராகரித்து வருவதாகவும், வயது முப்பதைக் கடந்த அவனுக்கு, பெண் கிடைப்பது இந்தக் காலத்தில் இனிமேல் கடினமென்றும் கூறி விட்டாள்.அதனால் மூக்கைக் குத்திக்கொள் நாக்கைக் குத்திக் கொள் என்று நிபந்தனைகள் போடாமல் இருப்பதே நலமென்றும் கூறினாள்.
மணப்பெண் பவித்ராவுக்கோ , அரவிந்த் போட்ட நிபந்தனையால், பயங்கர கோபம்! அம்மாவோ மூக்கைக் குத்திக் கொள்ளச் சொல்லி வற்புறுத்துகிறாள்.
தோழியுடன் ஒரு ஓவியக் கண்காட்சி சென்றவள், மூக்குத்தி அணிந்த நிலையில் ராஜபுத்திரப் பெண்கள் இருக்கும் ஒரு ஓவியத்தைப் பார்த்து ஈர்க்கப்பட்டு, அதை வாங்கினாள்.
“ஹை “, என்ற குரல் கேட்டுத் திரும்பியவள் தன் மருத்துவர் தோழி தேவியைப் பார்த்துப் புன்னகைத்தாள்.
பேசிக் கொண்டிருக்கும் போது,” இந்த மூக்குத்தி அணிந்த பெண்கள் ஓவியம் நல்லா இருக்குல்ல ? நீ கூட மூக்குத்தி குத்திக்கோ.மருத்துவ ரீதியாக மூக்குத்தி அணிவது, மெட்டி அணிவது போன்றவை கருப்பையைப் பலப் படுத்தும்”, என்று கூறி விடைபெற்றாள் தேவி.
இரண்டு மூன்று நாட்களாகப் பாவம் இவளுக்கு போன் செய்து அழைப்பைத் தவற விட்ட அரவிந்த்தை அழைக்க அலைபேசியை எடுத்தாள் பவித்ரா.

மாலா மாதவன்/இருப்பின் இறுக்கம் – விருட்சம் நாளிதழ்

7 Comments on “முனைவர் சிவகாமசுந்தரி நாகமணி/மூக்குத்தி முத்தழகி”

Comments are closed.