அழகியசிங்கர்/க.நா.சுப்ரமண்யம் நினைவாகக் கவிதைப் போட்டி

போன ஆண்டு ஞானக்கூத்தன் நினைவாகக் கவிதைப் போட்டி நடத்தினேன்.
62 கவிதைகளைத் தேர்ந்தெடுத்துப் புத்தகமாகக் கொண்டு வந்தேன்.
இந்த முறை க.நா.சுப்ரமண்யம் பெயரில் கவிதைப் போட்டி.
முதன் முதலில் புதுக்கவிதை என்ற வகைமையைத் தமிழுக்கு அறிமுகப் படுத்தியவர் க.நா. சுப்ரமணியன்.
அவர் பெயரில் ஒரு போட்டி நடத்த வேண்டுமென்று வெகு நாட்களாய் ஆவலாக இருந்தேன்.
இந்த ஆண்டு என் ஆவலை நிறைவேற்றுகிறேன்.
கவிதைப் போட்டியில் கலந்து கொள்பவர்கள் கவனத்திற்கு:
புதுக் கவிதை மட்டும் அனுப்ப வேண்டும்.
வேறு வகையான கவிதைகள் ஏற்றுக் கொள்ள முடியாது. குறிப்பாக மரபுக் கவிதைகள்.

  1. ஒருவர் ஒரு கவிதை மட்டும் எழுதவும்
  2. 10லிருந்து 20 வரிகளுக்குள் கவிதை இருக்க வேண்டும்
  3. கவிதைக்குக் கட்டாயம் தலைப்பு வைத்து எழுதவும்
  4. கவிதை எழுதிய தேதியைக் குறிப்பிட வேண்டும்
  5. ஏற்கனவே பிரசுரமான புத்தகத்தில் வெளிவந்த கவிதைகளை அனுப்பக் கூடாது
  6. கவிதை வர வேண்டிய கடைசித் தேதி 31.01.2026
  7. editorvirutcham@gmail.com என்ற முகவரிக்கு யூனிக்கோடில் டைப் அடித்து அனுப்பவும்.
  8. அதிகமாகக் கவிதைகள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டியிருப்பதால் பரிசு எதுவும் தர இயலாது.
  9. புத்தகம் கொண்டு வரும்போது ஒரு புத்தகம் அனுப்பப் படும்
  10. கவிதை அனுப்பும்போது மறக்காமல் முகவரி, வாட்ஸப் எண் அனுப்பவும்
  11. கவிதை அனுப்புவர் மறக்காமல் க.நா.சுப்ரமண்யம் நினைவாகக் கவிதைப் போட்டிக்கு என்று குறிப்பிடவும்

இந்த முறை அதிகமான எண்ணிக்கையில் கவிதைகள் வரும் என்று எதிர்பார்க்கிறேன். கலந்து கொள்பவர்களுக்கு வாழ்த்துகள்.
தேர்ந்தெடுக்கப்படும் கவிதைகள் தினசரி விருட்சத்திலும், அச்சு இதழிலிலும் அரங்கேற்றமாகும்