விஜயலக்ஷ்மி கண்ணன்/மறு சுழற்சி ..கதை வாசித்து விமர்சனம்

எல்லோருக்கும் வணக்கம்.
நேற்று 02.01.2026 அன்று மாலை ஜூம் வழி கதைஞர்கள் கூட்டத்தில் எனக்கு திரு.
நா. சொக்கன் அவர்கள் எழுதிய ஒரு சிறுகதையைப் பேச வாய்ப்பு அளித்த அழகியசிங்கர் அவர்களுக்கு நன்றி.
மிக சிறிய கதை தான் என்றாலும் உள்ளே பொதிந்து இருக்கும் கருத்து அது எழுதப்பட்ட காலத்திற்கு மிகப் பொருந்தும்.
2003இல் வெளிவந்த “ஒரு பச்சை பார்க்கர் பேனா”என்ற சிறுகதை தொகுப்பிலிருந்து எடுத்தது. “மறு சுழற்சி”
கதாசிரியர் தான் தன் நிலையில் கதையை நகர்த்துகிறார். ஒரு சின்ன கிராமம்,சென்னைக்கு பக்கமும் இல்லை,தூரமும்.இல்லை என்ற இடத்தில் அவருடைய அலுவலகம் அமைந்து இருந்தது.
எல்லா விதமான உதிரிபாகங்கள் தயாரித்து
வெளிநாட்டு இறக்குமதி என்று விற்று.விடுவார்கள் போல.
ஒரு நாள் வேலை செய்பவர்கள் அனைவருக்கும் விசிட்டிங் கார்டு அச்சிட்டுத் தரப்போவதாக அறிவித்தார்கள்.
இந்த அடையாள அட்டை தான் கதையின் விஷயம். ஆனால் பெரிய விஷயம் ஒன்றை சொல்வதற்கு ஆசிரியர் கையாண்டிருக்கும் ஒரு துடுப்பு.
அவருடன் வேலை பார்த்தவர்கள், சபாபதி, எதிர் சீட் கோபால், அக்கவுண்டண்ட்,
பார்த்தசாரதி ஆகியோர், ஒவ்வொரு விதமாக விமரிசித்தார்கள்.
மிக அண்மையில் ஜெகந்நாதன் என்ற ஒரு இளைஞரை மேனேஜர் பதவியில் அமர்த்தியிருந்தார் முதலாளி.
எல்லாம் இந்த மேனேஜர் வேலை தான் என்று விமரிசித்தார்கள்.
அடையாள அட்டை எதற்கு?விலாசம் வாயால் சொன்னால் போதாதா?
இந்த அட்டையால் என்ன உபயோகம்? இப்படி பலவிதம் கேள்விகள்.
120 கிராமங்கள் மட்டும் இல்லை இந்த உலகம் என்று புரிய வைக்க மிக்க சிரமம்.
ஒருவர் அந்த அட்டை வந்தவுடன் அதை சொருக ஹோல்டர் எல்லாம் பொய் பார்த்து பிறகு,அட்டை கிடைத்த பிறகு எல்லோர்க்கும். சேர்த்து வாங்கினால் விலையில் சலுகை கிடைக்கும் என்ற தீர்மானத்திற்கு வந்தனர்.
விசிட்டிங் கார்டு வந்து விட்டது.
யாருக்கும் பிடிக்கவில்லை.
கார்டு வரும் வரை இருந்த கற்பனை உலகம் இடிந்து விழுந்தது.
சாணி நிறத்தில்,மங்கலாக ,அதன் மேல் புழு நெளிவது போல் அச்சாகி இருந்த விசிட்டிங் கார்டை
அருவருக்கத் தக்க ஒரு பூச்சிபோல் இரு விரல்களால் பிடித்துக் கொண்டு சபாபதி இது என்ன அட்டை?வர வழியில் சாணி லே விழுந்த மாதிரி “என்று தூக்கி எறிந்தார்.
இந்த மேனேஜர் பண்ற வேலை.காசு அடிக்க பார்க்கிறான். முதல் நாள் பேசின போதே சொன்னான் கம்பெனியில் நிறைய மாற்றங்கள் கொண்டு வர வேண்டும் என்று.அது தான் இது என்று பலவாறான பேச்சுக்கள்.
ஒரு வழியா மேனேஜரை போய் விஷயத்தை சொல்ல நேரம் குறித்து எல்லோரும் போனார்கள்.
இவர்கள் வரவை எதிர்பார்த்த மேனேஜர் அந்தக்
கார்டு பற்றி விமரிசையாக பேசினார்.
மற்ற நாடுகளில் இந்த மாதிரி காகிதம் தான் உபயோகிக்கிறார்கள். நாம் தான் பின் தங்கி இருக்கிறோம்.
சாதரணமாக பல மரங்களை வெட்டி காகிதம் உற்பத்தி செய்யப் படுகிறது.இந்த காகிதம் அப்படி இல்லை.
ஏற்கனவே இருந்த காகிதத்தை அரைத்து மறு சுழற்சியில் தயாரிக்கப் பட்ட காகிதம்.
இதனால் நம் நாட்டின் சுற்றுச் சூழல் பாதிக்கப் படுவதில்லை.பசுமை காக்கப் படுகிறது.
சற்று மங்கலாக இருக்கே தவிர் நல்ல காகிதம்,கிழிப்பது கூட சிரமம்.இப்படியெல்லாம் பேசி புரிய வைக்க பாடு பட்டார் மேனேஜர்.
புரிந்ததோ இல்லையோ, எல்லோரும் மௌனமாக சீட்டில் போய் அமர்ந்தார்கள். முகம் திருப்தி காட்டவில்லை.
அடுத்து வரும் ஒரு நாள் முதலாளியை பார்த்து மேனேஜர் அடிக்கும் லூட்டியை சொல்ல வேண்டும் என்று தீர்மானித்து நாள் குறித்தார்கள். சபாபதி இந்த நண்பரை கேட்டார்.
நாங்க எப்பப் போனாலும் நீ கடைசி ஆளாய் வந்து நிற்கிறாய். எதுவும் பேசுவதில்லை. இந்த தடவை வா, வந்து குரல் கொடு,என்றார்.
இல்லை, நான் வரவில்லை.
மேனேஜர் சொன்னதில் அர்த்தம் இருக்கு.
நாட்டின் சுற்றுச் சூழல் மீது ஆர்வம் கொண்டு நல்ல விஷயம் இது.
நான் வீட்டுக்கு கிளம்புகிறேன், பையன் கார்டு பார்க்க ஆவலோடு இருப்பான் என்று சொல்லி டிஃபன் பாக்ஸை எடுத்து பெட்டிக்குள் வைத்து எல்லா கார்டுகளையும் சீராக எடுத்து கொண்டு கிளம்பினார் ஆசிரியரும்.
இந்த சிறு கதை சிறிதும் சுவாரசியம் குறையாமல் ஆரம்பம் முதல் கடைசிவரை நகர்ந்து போகிறது.ஆசிரியரின் அருமையான சொல்லாடல். உள்ளத்தின் உணர்வுகளை உயிரோட்டத்தோடு பின்னியிருக்கிறார்.
வருடம் 2000 மேல்
நம் நாட்டில் சுற்று சூழல், ஓசோன்,பசுமை ஆகியவை பற்றி அதிகம் பேசப் பட்டது. சமூகம் இவைகளை கவனிக்க தொடங்கிய காலம்.
அந்த காலத்தில் எழுதப் பட்ட கதை என்றாலும் எக்காலத்துக்கும் பொருந்தும் விஷயம். எல்லோரும் தெரிந்திருக்க வேண்டியதும் கூட.
எழுத்தாளர் சொக்கன் அவர்கள் மிக எளிமையாகவும் சிறப்பாகவும் எழுதிய இந்த கதை படிக்க வாய்ப்பு கொடுத்த அழகியசிங்கருக்கும்,ஆசிரியருக்கும் நன்றி.