விஜயலக்ஷ்மி கண்ணன் /அம்மா யார்?

ஒரே பிரசவத்தில் நாலு பெண்களை பெற்று,விஷயம் அறிந்த பின் மனம் குமுறி அழுத நல்லம்மா ஒரு முடிவுக்கு வந்து செயலும் பட்டாள்.
உமா,பாமா, லதா, கீதா,நால்வரும் போட்டதுப் போட்ட படி அப்படியே போலீஸ் ஊர்தியில் ஏறிக் கொண்டார்கள்.
போலீசார் கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் திருத்திரு என முழித்தார்கள்.
“இவங்க உங்க அம்மா தானா” போலீஸ் திரும்ப திரும்ப கேட்டார்கள்.
நால்வரும் ஒரே குரலில்”எங்களுக்குத் தெரியாது ஐயா,நாங்க அம்மாவை பார்த்ததே இல்லை.எங்களை வளர்த்தவங்க அந்த மகராசி போன மாசம் காலமாய்ட்டாங்க.நாங்கள் இப்ப யாரும் இல்லா அனாதைகள் ஐயா.”என்று சொன்னதையே சொன்னார்கள்.
“ஐயா, நான் பாவி சார்,. ஏதோ ஒரு பயத்தில் குழந்தைகளை அந்த குழந்தைகள் காப்பகம் வாசலில் ஒரு தொட்டிலில் கிடத்திவிட்டு போய்விட்டேன் சார்.என் மனசாட்சி என்னை
கொல்லாத நாளே இல்லை சார்.
தயவு செய்து என் பெண்களை என்னோடு அனுப்புங்க சார்”என்று அவர் காலில் விழாத குறையாக கெஞ்சினாள் நல்லம்மா.
“எங்களுக்கு இருபது வயது ஆகிவிட்டது.
எங்கள் விருப்பப் படி வாழ எங்களுக்கு சுதந்திரம் உண்டு.”கீதா சற்று
உரக்க பதிலளித்தாள்.
உமா கோபத்தில்,”எங்களுக்கு இவங்க கூட போக விருப்பம் இல்லை.
இவங்க எங்க அம்மா இல்லை சார்.அப்படியேப் பெற்றவள் ஆனாலும் நாங்கள் இவங்களை அம்மா என்று ஒத்துக்கமாட்டோம்.பெற்றாள் என்றதால் அம்மாவாகிவிட முடியுமா?
எங்கள் நாலு பேரையும் பணம் காசு இல்லை என்றாலும் பெரிய மனசு கொண்டு வளத்தாங்களே , அவங்க தான் அம்மா சார்.
புண்ணியவதி.
இத்தனை வருஷம் இல்லாத அக்கரை இப்ப எப்படி வந்தது?
அன்னிக்கு எங்களை வேண்டாம் என்று ஒதுக்கிய இவங்களை நாங்க வெறுக்கிறோம்
எங்களுக்கும் இவங்க வேண்டவே வேண்டாம் சார்.”பொரிந்து தள்ளினாள்.
“சார், நீங்க கூப்பிட்டீங்க என்பதால் மரியாதை கொடுத்து வந்திருக்கிறோம்.
இருபது வருடங்களுக்கு அப்புறம் சொந்தம் கொண்டாடும் இந்த வேஷம் எங்களுக்கு பிடிக்கலை .”பாமாவும் தெளிவாக சொல்லி விட்டாள்.
“திருமணம் ஆகாம தவறிப் போய் நாலு குழந்தைகளைப் பெற்ற போது பயம்,வெட்கம் எல்லாம் சேர்ந்து தான் நான் அப்படி செய்தேன். தவறு,தவறு” என்று தலையில் அடித்து கொண்டாள் நல்லம்மா.
எங்களை வளர்தாங்களே, அந்த அம்மா எங்களுக்காக ,
திருமணமே பண்ணிக்கல ஐயா.அவங்க தியாகி சார்.”என்ற லதா,”நாங்க வர்றோம் சார்.”என்று கூறி கிளம்பிவிட்டார்கள்.
போலீசார் வந்த வண்டியிலே ஏற சொல்லி காப்பகத்தின் முன் கொண்டு விட்டார்கள்.
அந்த நால்வரும் அந்த காப்பகத்தின் திடமானத் தூண்கள்.

01.01.2026

உஷா சங்கரநாராயணன்/பிரார்த்தனை – விருட்சம் நாளிதழ்

2 Comments on “விஜயலக்ஷ்மி கண்ணன் /அம்மா யார்?”

Comments are closed.