
நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு, நான்கு தோழிகள் ஓரிடத்தில்
சந்தித்துக் கொண்டனர்.
சிறுவயது கொண்டாட்டங்கள் நீர்த்துப் போன கதையை பேசிக்கொண்டு இருந்தனர்.
இளவயதிலேயே பெற்றோர்களை இழந்து விட்டதால், குடும்பச் சுமையை சுமக்க வேண்டியதாயிற்று என்று ஒருத்தி சொன்னாள்.
குடிகார கணவனுக்கு வாழ்க்கைப்பட்டு அனுபவிக்கும் கொடுமைகளை மற்றொருத்தி சொன்னாள்.
மாமியார்,நாத்தனார் கொடுமையில் மாட்டிக் கொண்டு திணறுவதாக வேறொருத்தி புலம்பினாள்.
படித்த படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்காததால், துணிக் கடையில் கால் கடுக்க நின்று வேலை பார்ப்பதாக நான்காவது பெண் கண்ணீர் விட்டாள்.
மொத்தத்தில் பெண்களின் தியாக முகம்தான் எப்போதும் வெளியில் தெரிகிறது. அவர்களின் உள்ளக் கிடக்கையை ஒரு சிலரே அறிய முடிகிறது.
*

One Comment on “S அர்ஜுனன் /பெண்”
Comments are closed.