
“மகளிருக்கு எதிரான வன்கொடுமைகள் இன்னும் மாறவில்லை. மணக்கொடை கேட்கும் பழக்கம் இன்றும் தொடர்கிறது.
பெண்ணைக் கொடுமைப் படுத்தும் காட்டுமிராண்டிக் கும்பல் இன்னும் நாட்டில் திரிந்து கொண்டுதான் இருக்கிறது.
பெண்மையை உயர்வு செய்வோம்”, மேடையில் முழக்கமிட்டு இருக்கையில் வந்து அமர்ந்தாள் கவிஞர் “பெண் சிங்கம்” பெரிய நாயகி.
கூட்டம் அவள் பேச்சில் வயப்பட்டு கைதட்டியது. அவளுக்குப் பரிசும், விருதும் வழங்கப்பட்டன.
விழா முடிந்து காரில் வீடு திரும்பும்போது, அவளது அலைபேசி அலறியது. மறுமுனையில் அவள் கணவன் குரல்,”என்னடி! வீட்டுக்குப் போயிட்டியா? இல்லை… ஏதோ விழா, கவிதை , கத்திரிக்காய்னு கதை பண்ணிக்கிட்டிருக்கியா?
இன்னும் அரை மணி நேரத்தில் வீட்டுக்கு வருவேன்.எனக்குச் சூடாச் சமைச்சி வை”, குடிவெறியில் உளறலாக ஒலித்தது.
” டிரைவர்! காரைச் சீக்கிரம் ஓட்டுப்பா”, பயத்துடன் ஆணையிட்டாள் ‘பெண் சிங்கம்’, பெரிய நாயகி .
என்ன செய்வது? அவளுக்கு இரண்டு முகங்கள்!

பல இடங்களில் நிலைமை இதுதான். யதார்தத்தை எழுதியிருக்கீங்க. வாழ்த்துகள்.
நிதர்சனம்
பெண்களின் நடைமுறைச் சிக்கலைத் தெரிவிக்கும் அருமையான கதை. வாழ்த்துகள்💐