
கணேஷ்….என்னடா சொல்ற… அம்மா நல்லாத்தானே இருந்தாங்க. அப்பா இறந்து காரியம் கூட நேத்தைக்குத்தானே முடிஞ்சுது.
ஆமாடா…தினேஷ்.. எங்களுக்கும் அதிர்ச்சிதான். அப்பா சொகமில்லாம இருக்கறப்பவே எங்களோட டவுனுக்கு வந்துடச் சொன்னேன். பிடிவாதமா மறுத்துட்டாரு….
ஆனா… ஒண்ணு மட்டும் ஆச்சரியமா இருக்குடா…அவர் நெனைச்ச மாதிரியே தன் இணையையும் தன்னோட கூட்டிக்கிட்டாருடா…
அன்றில் பறவைகள் மாதிரி….சேர்ந்தே வாழ்ந்து…சேர்ந்தே போயும் சேர்ந்துட்டாங்க…குரல் கரகரக்கப் பேசி இணைப்பைத் துண்டித்துவிட்டான்.
தினேஷ் காதுகளில் கணேஷ் சொன்ன ‘அன்றில் பறவைகள் ‘ வார்த்தை எதிரொலித்துக் கொண்டே இருந்தது.
நம்மோட இயலாமையை முன்வைத்து வயதான காலத்தில் பெற்றோர் இருவரையும் பிரித்து வைத்திருக்கிறோமே….. மனம் குற்ற உணர்ச்சியில் குறுகுறுக்க…. தம்பி வீட்டை நோக்கி நடையைக் கட்டினான்….இணைகளை ஒன்று சேர்க்கும் முகாந்திரமாக….
முனைவர் சிவகாமசுந்தரி நாகமணி/பெண் சிங்கம் – விருட்சம் நாளிதழ்

One Comment on “நாபா.மீரா/அன்றில் பறவைகள்”
Comments are closed.