அழகியசிங்கர்/இன்று

இன்றைய நாள்
நாம் கொண்டாடும்
குடியரசு தின நாள்

பள்ளி மாணவர்கள் முகத்தில்
மகிழ்ச்சி கரை புரண்டோடும் நாள்

வங்கி ஊழியர்கள்
அப்பாடா
ஒரு நாள் லீவு
என்று முணுமுணுக்கும்
நாள்

நான் இன்னும்
பெரியவனாகவில்லை
எங்கள் பள்ளிக்கூடம்
வந்து
எங்கள் மாணவர்களைப்
பார்த்து
பேசுங்கள் என்று
யாரும் கூப்பிடவில்லை

ஆனால்
இன்று மகத்தான நாள்