விஞ்ஞானி/இணையிலா இணை

அடிப்பட்ட காலிடம்
அடுத்த கால் கேட்டது
வலிக்கிறதா என்று

இந்த வலியை விட
எனக்கும் சேர்த்து நீ படும்
துன்பம்தான் அதிகமாய்
வலிக்கிறது என்றது
அடிப்பட்ட கால்.

அதே நேரம்
அடிப்பட்டவன் குரல்
போதும் என்றது
அவன் மனைவியின் குரல்
இன்னும் ஒரு வாய்தான்
சாப்பிடுங்கள் என்றது.

One Comment on “விஞ்ஞானி/இணையிலா இணை”

Comments are closed.