அனங்கன்/கடவுள் எழுதிய கவிதை

பறவைக்கூட்டம் கலைத்துப்போட்ட வெளியை
ஒன்றுசேர்க்கப்பார்க்கிறது…வட்டமிடும் கழுகு.

பறவைகள் கடந்ததும்
அநாதையாய் உணரும் வானத்தைச் சிவக்கச்செய்கிறது
கீழிறங்கும் சூரியன்.

ஒற்றைக்குச்சியில் தவம் செய்யும் மீன்கொத்தியை…
சீண்டிப்பார்த்துவிட்டுப்போகிறது ஊசித்தட்டான்.

கொம்பேறிமூக்கனை கண்டதும் பதறிப்பறக்கும்
பூஞ்சிட்டைப் பிரிந்து தவிக்கிறது செம்பருத்தி.

அலகில்தேங்காய்நாரினைப்பற்றி
கூடுகட்ட அலைகிறது…சிட்டுக்குருவி.

கவிதைஎழுதவரவில்லையென்று….தோட்டத்திற்கு வந்தால்
என்னைச்சுற்றி எத்தனை கவிதைகள்.

வே.கல்யாண்குமார்/அருணகிரித் தமிழ்.. – விருட்சம் நாளிதழ்

3 Comments on “அனங்கன்/கடவுள் எழுதிய கவிதை”

Comments are closed.