
உன் மாபெரும் ஈர்ப்புக்கு
எதிர்ப்பு தெரிவிக்க இயலாமல்
உனது அச்சினை நோக்கி வேகமாக நகர்ந்து வரும்
சின்னஞ் சிறு கிரகம் நான்
ஒரு வாய்ப் புல்லுக்கு
முகத்தை உரசியபடியே
உன் கால்களை குறுக்கும்
மறுக்குமாக சுற்றி வரும்
சிரிய வெள்ளாடு நான்
யோசிக்காமல் எழுதத் தொடங்கி
மூச்சு விட முடியாமல் சிக்கித் தவிக்கும்
ஒரு முடிவுறா கவிதையின்
கடைசி வரி நான்
தகிக்கும் தணலோடு
சமாதானம் பேச
கங்குகளுக்குள்
விரல்களை நுழைக்கும்
யாரும் அறியா பரம் பொருள் நான்

One Comment on “தங்கேஸ்/நான்”
Comments are closed.