ம.சக்திவேலாயுதம் கவிதை

பார்க்கும் போதேல்லாம்
ஏதாவது நிகழ்ந்து விடுகிறது..
நினைக்கும் போதெல்லாம்
ஏதாவது நடந்து விடுகிறது..
பார்க்காத போதெல்லாம்
என்னவெல்லாமோ நிகழ்கிறது..
நினைக்காத போதெல்லாம்
ஏதேதோ நடக்கிறது..
அதனாலே
பார்த்தும் பார்க்காதபடியே
நடக்கிறேன்..
நினைத்தும் நினைக்காதபடியே
நிகழ்கிறேன்..
என் மனசு அமைக்கும்
நிகழ்தகவில்
எது நடந்தாலும்
என்ன நிகழ்ந்தாலும்
மிச்சமிருப்பது நானும்..
என் ஒற்றை நம்பிக்கையும்!