பி. ஆர். கிரிஜா/ஏளனம் !

காரிருளைக் கண்டு
விடிகாலை எள்ளி நகையாடியதாம் !
உன்னைக் கண்டு நடுங்குவோர் பல பேர் !
என்னைக் கண்டு மகிழ்வார் எண்ணிக்கை எண்ணிலடங்கா !
இறுமாப்புடன் மார் தட்டியது விடியல் ;
உனக்குத் தெரியுமா, என்னாலே ஜனனம்
உன்னாலே தகனம் , அமைதியான பதில்
காரிருளிடமிருந்து !
விடியல் வெட்கித் தலை குனிந்தது !