மஞ்சுளா சுவாமிநாதன்/மீட்சி

சிறுவயதில் கருப்பி, அண்டங்காக்கா என அவளை பலர் அழைத்தபோது வலித்தது. கோதையார் பருவத்தில் அவளது முகமே அவளுக்கு வெறுத்துப் போனது. அதனை சித்திரமாகத் தீட்டி ஒவ்வொரு நாளும் அவள் அடைந்த அவமானங்களை கோடுகளாக முகத்தில் வரைந்தாள். அவளது வலியை நினைத்து நினைத்து அமிழ்ந்து போவதில் இன்பம் கொண்டாள்.

இவை அனைத்தும் அவனைப் பார்க்கும் வரை. அவன் அவளை அழகி என்றான். அவளுக்காகவே கவிதைகள் எழுதினான். அவளது தன்னிரக்கக் குழியிலிருந்து அவளை மீட்டெடுத்தான். அவளது அகம் அவனால் அழகானது. அது அவள் முகத்திலும் பிரதிபலித்தது. அந்த படத்தை அவள் சட்டம் போட்டு நடுக்கூடத்தில் மாட்டினாள். இப்போது தன்னம்பிக்கையின் சின்னமாக. அவளது அக பயணத்தின் சின்னமாக. அவனது அன்பின் சின்னமாக.

ராமசந்திரன் உஷா/ஓவியப் பெண் – விருட்சம் நாளிதழ்

One Comment on “மஞ்சுளா சுவாமிநாதன்/மீட்சி”

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன