ராமசந்திரன் உஷா/ஓவியப் பெண்

சுரேந்திரன் தான் வரைந்த ஓவியத்தின் முன் நின்றிருந்தார்.
ப்ச்சு.. என்று மெல்லிய குரல் பக்கத்தில் கேட்டது.
அதே ஓவியப் பெண்.
“காதுகள் மிக நீண்டு, அசிங்கமாய் இருக்கிறது அதையும் கொஞ்சம் சரி செய்து விடுங்கள்” என்றாள் அவள்.
“நான் படைப்பாளி! எப்படி வரைய வேண்டும் என்பதை நான் தான் முடிவெடுப்பேன்” என்றார்.
“என் உருவத்தை கேவலமாய் வரைய உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை” என்றாள் அவள்.
அவர் பதில் சொல்லாமல் நகர முற்ப் படும் பொழுது, அந்தப் பெண் காற்றாய் சுழன்று சுவரில் இருந்த ஓவியத்தினுள் நுழைந்தாள்.
ஓவியம் இருந்த இடம் வெறும் காகிதமாய் காட்சியளித்தது.

உஷா சங்கரநாராயணன்/நட்பாம் கிழமை – விருட்சம் நாளிதழ்
*

One Comment on “ராமசந்திரன் உஷா/ஓவியப் பெண்”

Comments are closed.