
“ஹாய் டா. என்ன பிஸியா” என்றவாறு உள்ளே வந்தான் சூர்யா. ஹரீஷ் டேபிளில் இருந்த அந்த உருவத்திற்கு பின்பக்கம் கனெக்டர்ஸ் சரியாக இருக்கிறதா என்று பார்த்துக்கொண்டே “வாடா இஞ்சி” என்றான் சிரித்துக்கொண்டே.
“என்னடா இஞ்சி, சுக்குன்னுட்டு என்று சிரித்துவிட்டு அது சரி நீ மட்டும் என்னவாம், நீயும் ஒரு ஒன் & சீரோ ஆளுதானே! என்றான் பதிலுக்கு.
அதுசரி, ஒன் & சீரோலயே உழல்றதால கம்பிகளை வளைச்சு ஒண்ணு, சைபர் மாதிரியெல்லாம் ஏதோ காமெடியா உருவம் பண்றாப்ல இருக்கு?”
“ஒதை வாங்கப் போறே. கொஞ்சம் எட்ட நின்னு பாரு இது என்ன கம்பிகட்டுறமாதிரி இருக்கான்ன?” என்றான் ஹரீஷ்.
எட்ட நின்று பார்த்து, “ரெண்டு பல்ப் பொருத்தியிருக்க, ஏதோ எல் ஈ டி வச்சிருக்க போல. நடுவுல என்னவோ ஒரு கீற்றா சிவப்பா தெரியுது. என்னட இது மாடர்ன் ஆர்ட் சிலையா? ஹாபியா? இல்ல தொழிலேவா?” அடுக்கினான் சூர்யா.
“இல்லடா இது ஒரு ஹ்யூமனாய்ட். நாம விரும்பற உருவத்துக்கு வெளியே முகம் மாதிரி அதோ அந்த 3டி ப்ரிண்டர்ல பிரிண்ட் பண்ணிக்கலாம். நயந்தாரா, ஐஸ்வர்யா ராய் இப்படி எது வேணாலும்”.
“ஓ!! எதுக்கு, துணிக்கடை வாசல்ல நிறுத்தவா? “
“மக்கு புத்தி போகுது பாரு!! இது ஒரு ஸ்பை ரோபோ. கண்ல ஸ்கானர் வச்சிருக்கேன். எல்லா இடமும் 360 டிகிரி சுழன்று படம் எடுத்து ப்ராசஸ் பண்ணும். பார்க்க ஒரு சாதாரண பொண்ணு மாதிரி நிற்கும் “. என்றான் ஹரீஷ்
“அட சூப்பர், தினமும் புதுப்புது ட்ரெஸ் மாட்டிவிட வேண்டியதுதான்.” என்று சிரித்தான் சூர்யா.
“சும்மா கிண்டல்தான் உனக்கு. இது பெரிய அளவுல ரீச் ஆகும் பாரு” என்று ஹரீஷ் சொல்ல, “ச ச கிண்டல் இல்லடா சும்மா விளையாட்டு” என்று அவனைத் தேற்றிவிட்டு, அவன் கம்பெனி ஹெட்டிடம் பேசினான் அவர்கள் புதிதாக உருவாக்கும் ஸ்பை செயலிக்கு ஒரு நல்ல வடிவம் கிடைக்கப்போகிறது என.
நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனின் கொட்பின்றி ஒல்லும்வாய் ஊன்றும் நிலை. (திருக்குறள் 789).

2 Comments on “உஷா சங்கரநாராயணன்/நட்பாம் கிழமை”