
ஓவியங்கள் வரைவதில் தர்ஷனாவுக்கு ஆர்வம் உண்டு.
ஜன்னலில் ஒரு பூ மட்டும் எட்டிப் பார்ப்பது போல, பனைமரம் வானத்துக்கு விசிறி ஆவது போல, மழைக்குப் பின்னே தெரியும் மின்னலில் ஒரு முகம் தெரிவது போல என்றெல்லாம் அவள் ஓவியங்களில் ஒரு கற்பனை இருக்கும்.
ஒரு நாள் அவள் தன்னைத்தானே வரைந்து கொண்டாள். ஓவியத்தில் அவள் முகம் மட்டுமே இருந்தது.
ஓவியத்தை பார்த்தவர்கள் “யார் இது?” என்று கேட்டார்கள்.
“நான்தான்” என்றாள்.
“உன்னைப் போலவே இல்லையே?”
என்றார்கள்.
“ஏன்? நான் இப்படித்தானே இருக்கிறேன்?”
முகத்துக்குள் ஒரு முகம் தெரிவது போல இருந்தது. கண்களில் கனவுகள் தெரிந்தன. அறிவுக்கு அடையாளமான நெற்றி பளிச்சென்று விசாலமாக இருந்தது.
அவளுக்கு, தான் வரைந்த தன் முகம் சரியாகத்தான் இருந்தது. அவர்களுக்குத்தான் அது புரியவில்லை.

One Comment on “ஸ்ரீராம்/ மன ஓவியம்”
Comments are closed.