
–
மெனக்கெடல்
யாவிற்கும்
இயைந்துபோன
எங்களுக்கு
சொல்லப்பட்டிருந்தது
‘மதிக்குமொருவருக்கு
தரிக்கும் கிரீடமாகப் போகிறீர்களென’
வண்ணங்களில்
வார்த்த வார்த்தைகளால்
விருப்பங்கள் மேவி நிற்க.
காணாத
காத்திருப்பில்
காலத்தை தின்று
சாரமற்ற
சந்தர்ப்பமொன்றில்
நீங்கள்
சொல்கிறீர்கள்
நெகிழிப் பூக்களால்
நிற்கும் கூடை என்று.
நீங்களாக
இருக்க வேண்டுமென
நிம்மதி கொள்ள
நினைக்கும் பொழுதெல்லாம்
நகர்ந்து கொண்டே
இருக்கிறீர்கள்
நாளும் பொழுதும்
தாழாத துயரத்தில்
தள்ளியவாறு.
