சுகந்தி தாஸ்/உறங்கும் சொல்

13.02 26 அன்று இணையதளத்தில் நான் வாசித்த கவிதை

உனக்காக நான் இருக்கிறேன்
என்ற சொல்
உறங்கிக்கொண்டிருந்தது
நீ மட்டும் போதும்
என்ற சொல்
ஊமையாகி அழுதது

உன்னை மிகவும் பிடிக்கும்
என்ற சொல்
தன்முனைப்பால் துவண்டது
மன்னித்து விடு என்ற சொல்
மௌனித்துக் கிடந்தது
உனக்கு நன்றி என்ற சொல்
ஊருக்கு வெளியில் நின்றது

என்னை விட்டுப் போகாதே
என்ற சொல்
ஏக்கத்துடன் மறைந்தது
என்ன வேண்டும் என்ற சொல்
எதிர்பார்ப்புடன் கரைந்தது
உன் அன்பு விலைமதிப்பற்றது
என்ற சொல்
இன்னும் விற்கப்படாமல் இருந்தது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன