
இணையதளத்தில் நான் வாசித்த 3 கவிதைகள் பின் வரும்.
- காதலர் தினம்
கட்டிடுவோம் ஒரு காதல் கோட்டை.
காலமெனும்j காற்றினிலே ஆடிடுவோம் பொன்னூஞ்சல்!
பாலுடன் தேனாக கலந்திடுவோம்,
உருகிடுவோம் மெழுகென
தினமும் காதலில்!
காத்திருப்போம்,சாரலில் நனைந்திருப்போம்,
அணைத்திருப்போம் ,
நம்மை மறந்திருப்போம்!
ஓருயிர்,ஈருடல் என கட்டுண்டோம்,
கரும்பாக இனிக்கும் காதல் கனி.
- காதலர் தினமாமே!
காக்கைகள் இரண்டும் கொத்திக் கொத்தி சீண்டிக்கொண்டன!
கிளைமேல் ஊஞ்சல் ஆட இலைகள் அசைந்து இசைத்தன!
நிலவும் வானில்
சிரிக்க
நாணி குனிந்த பெண் காகம் கேட்டது
“இன்று ஏன் இத்தனை உடல்?”
“இன்று காதலர் தினம் என்று மாடியில்
இளசுகள் சொல்லக் கேட்டேன்”
பதிலளித்து மேலும் உரசிக் கொண்டது ஆண் காகம்!
- அவள் கண்கள் பேசிய நொடிகள்
அந்த நொடிகளின் நினைவில் நான்
என்னை மறந்தேன், எல்லாம் துறந்தேன.
வாய் பேசாத மொழி அவள்
விழிகள் இரண்டும்
சொல்லாடியது கண்டேன்.
வியந்தேன்,வெண்ணிலவு முகத்தின் ஒளியில்.
வா என்று அழைத்தது கருவிழிகள்.
போ என்றதும் அவள் மலரம்புகள்.
கண்கள் பேசின ஓராயிரம் கவிதை
பண்ணும் இசையும்
இரண்டற கலந்து.
புன்னகைப் பூத்த விழிகள் கண்டேன்
என்னவள் செய்த ஜாலம் என்னவோ?
கனவில் அவள் தந்த சுகம்
நினைவில் மலர்ந்து வாசம் பரப்பியது.
மழைச் சாரலில்
கையோடு மெய்
சேர குடையும் கை
கொடுத்ததே!
மறக்க இயலாது
அந்த நொடிகள்
உறக்கத்திலும் உறங்காத என் இமைகள்.
