
“நீ என்ன சொல்லறே வனிதா?”
அம்மா தேவகி அவளை ஆச்சரியத்துடன் பார்த்தாள்.
“ஆமாம்மா .எனக்கும் என் புருஷன் வினோதுக்கும் கிடைத்த இன்ப அதிர்ச்சி இது
எங்க கல்யாணம் நடந்து பதினஞ்சு வருஷம் ஆச்சா?இப்பதான் கர்ப்பமாக இருக்கேன்”
“இது உன்மகள் ஜனனிக்குதெரியுமா?”
“உனக்கே நான் இப்பதான் சொன்னேன் . அவ சின்னப்பொண்ணு.அவளுக்கு எதுக்கு சொல்லும்? நீ அப்பாகிட்டேயோ, ஏன் அக்கா
கிட்டகூடசொல்லாதே”
“நீ அக்காகிட்டேருந்து வாங்கி தத்து எடுத்து கிட்ட பொண்ணு தான்னு ஜனனிக்குத் தெரியுமா?”
“தெரியாது, அதை அவகிட்டே சொல்லக் கூடாதுன்னு அக்கா சொல்லிட்டா.அதற்கான நேரம் வரும்போது சொல்லிக்கலாம். அக்கா
சுனிதாவுக்கு தங்கமான மனசு.எனக்கு குழந்தை பிறக்காததால் தன்னுடைய சின்ன பெண்ணை எனக்குக்கொடுத்து உற்சாகப்
படுத்த நினைத்தாள் அதுவும் ஒருவகை தியாகம்தான்.என் விஷயம் அக்காவுக்கு தெரியவேண்டாம்”.
“ஏன்”
“வேண்டாம்னா விடு இதுக்கெல்லாம் நான் விளக்கம் தர முடியாது. ஜனனிக்கு தன் பாட்டி தாத்தாவிடம் நிறைய
பாசம். இரண்டு குடும்பங்களும்மாம்பலத்தில் ஒரேபன்மாடிக்கட்டிடத்தில்முதல் தளத்தில் இருந்ததால் அவர்களிடையே பாசமும்,நெருக்
கமும் அதிகமாக இருந்தது அக்கா சுனிதாகுடும்பம் மும்பையிலிருந்து சுனிதாவின் கணவன் செல்வா அங்கேவங்கி
ஒன்றில் பணியாற்றினான். அவர்களது மகள் ரமா ஜனனியைவிட இரண்டு வயது பெரியவள்
இரண்டு வாரங்களுக்குப்பிறகு….
பெங்களூரில் வினோதின் நெருங்கிய உறவினர்வீட்டில் நடந்த திருமணத்திற்கு வனிதாவும் வினோதும் போகவேண்டி வந்தது.
ஜனனிக்கு பள்ளியில் பரீட்சை இருந்ததால் அவளை பாட்டியின் பொறுப்பில்விட்டு செல்லவேண்டியதாயிற்று.
“கவலைப்படாமல்போ ” அவர்கள் கிளம்பிப்போனதிலிருந்தே ஜனனி
“பாட்டி அப்பா,அம்மா எப்ப வருவாங்க”என்று அடிக்கடி கேட்டு துளைத்தெடுத்தாள்.
சரியாக சாப்பிடவில்லை,தூங்கவும்.இல்லை வனிதா அடிக்கடி ஜனனியை அழைத்துப் பேசியபோது அவள் அழும் குரல்தான்
கேட்டது.
திருமணம் முடிந்துவினோதும்வனிதாவும் திரும்பிவர ஒரு வாரமாகிவிட்டது
.”உடனே வந்திருக்கலாமே ஜனனி பாவம் உங்களை ரொம்ப மிஸ்பண்ணிடுத்து”
“காரணம் இருக்குமா” வனிதா சொன்னாளே தவிர எந்தவித விளக்கமும் தரவில்லை
ஒருமாதமாகியும் தன் உடல்நிலையை
பரிசீலித்துக்கொள்ளவனிதாமருத்துவமனை பக்கமேபோகாதது அம்மாவை கவலைப்பட வைத்தது.
“ஏன் வனிதா செக்அப்புக்கு போகலையா?”
“அதுக்கெல்லாம் அவசியமில்லை”
“என்ன சொல்லரே நீ?”
நானும் வினோதும் இதுவிஷயமாகயோசித்து முடிவெடுத்தோம். எங்களுக்கு ஜனனி ஒரு
குழந்தை போதும் இன்னொரு குழந்தையை பெற்றெடுத்து வளர்க்கிற மூடில் நான் இல்லை.அதற்கான வயதும் பொறுமையும்
எனக்கில்லை. ஜனனிமீது நாங்க வைத்திருக்கிற பாசத்தை பகிர்ந்துகொள்ளும் மனநிலையிலும்நான்இல்லை. அதனால் பெங்களூரில்
ஆஸ்பத்திரியில் டாக்டராக இருக்கும் என் சினேகிதி ஒருவளின்உதவியுடன்கருக்கலெப்பை செஞ்சுக்கிட்டேன்இதுயாருக்கும்
தெரியவேண்டாம். “
அதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அம்மா வாயடைத்துப்போனாள்.
